டுவிட்டரில் அதிக நபர்கள் பின்தொடர்பவர்கள் பட்டியலில் தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் அந்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளார்.

AB-de-vilires

இதற்கு முன்னதாக, அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் ட்ரேவோர் நோவா முதலிடத்தில் இருந்தார். குறித்த நகைச்சுவை நடிகரை 2.97 மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அணித் தலைவர் கிராம் ஸ்மித் 9 இலட்சத்து 5 ஆயிரம் பேருடன் 5ஆவது இடத்தையும், ஓய்வுபெற்ற சகலதுறை ஆட்டக்காரர்  ஜக் கலிஸ் 8 இலட்சத்து 49 ஆயிரம் பேருடன் 6ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தென்னாபிரிக்க வீரர் டு பிளஸ்ஸி 7 இலட்சத்து 78 ஆயிரம் பேருடன் 8ஆவது இடத்தையும், ஜே.பி.டுமினி 7 இலட்சத்து 69 ஆயிரம் பேருடன் 9ஆவது இடத்தையும் அல்பி மோர்கல் 7 இலட்சத்து 54 ஆயிரம் பேருடன் 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டி வில்லியர்ஸ், ’ஜெண்டில்மேன்’ ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியின்  ரசிகர்களைக் கூட தன்வசம் கட்டிப்போட்டுள்ளார்.

இந்நிலையில், டுவிட்டர் தளத்தில் தென்னாபிரிக்க பிரபலங்களில் அதிக நபர்கள் பின் தொடர்பவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்து, டி வில்லியர்ஸ் சாதனை படைத்துள்ளார். இதுவரை அவரை 2,990,731 பேர் பின் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.