அமெரிக்காவில் நடிப்பு பயிற்சியைப் பயின்ற சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் இந்த ஆண்டே அறிமுகமாகிறார்.

அவர் அறிமுகமாகும் படத்தை இயக்குநர் பாலா அல்லது அவரது உதவியாளர் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் இயக்கவிருக்கிறார்கள். இவர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடயிருக்கிறார் சீயான் விக்ரம்.

தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை தான் தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநருடன் பர்ஸ்ட் லுக்கை தீபாவளி விருந்தாக வெளியிடுவார் என்கிறார்கள் சீயானுக்கு நெருக்கமானவர்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்