மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை மேலும் 1 4  நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த வழக்கினை ஒத்திவைத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைக்கு  எதிர்வரும் 16 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

இதன்போது எதிராளிகள் ஆட்சேபனை தெரிவித்ததன் காரணமாக அடுத்த வழக்கின் போது சட்டமா அதிபரினதும் ,அரசாங்க அதிபரையும் ஆலோசனைக்கு அழைக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளர்.

 

 

திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஏற்பட்ட தீயினை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் குறித்த நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

அதனைத்தொடர்ந்து திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதை தடுக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் அப்பகுதி மக்களினால் வழக்கு தொடரப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதிவரையில் அப்பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இந்த தடை காரணமாக மட்டக்களப்பு நகரில் கழிவுகளை அகற்றுவதை மட்டக்களப்பு மாநகரசபை இடைநிறுத்தியதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரம் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கிவருவது குறிப்பிடத்தக்கது.