மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை  உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த  அத்து மீறல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னின்று செயற்­பட்ட மேலும் இரு­வரை கைது செய்ய இரு தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்­ஷாவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த இரு தனிப் படை­களும் அமைக்­கப்பட்­டுள்­ளன.  கிரு­லப்­பனை, பூர்­வா­ராம விகா­ரையின் அரம்­பே­பொல ரத­்ன­சார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான மஹ­வா­துவ, வாதுவை பகு­தியைச் சேர்ந்த பிரகீத் சாணக குண­தி­லக ஆகி­யோரைக் கைது செய்­யவே இவ்­வாறு விசேட பொலிஸ் படை அமைக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

இதில் பிரகீத் சாணக்க குண­தி­ல ­க­வுக்கு எதி­ராக பாணந்­து­றையில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது  பெற் றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும் பாணந்­துறை வித்­தி­யா­லயம் ஒன்றின் பெண் அதி­பரை அச்­சு­றுத்­தி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­தா­கவும் அது தொடர்பில் கைது செய்­யப்பட்டு பிணையில் உள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குறித்த இரு­வரும் தற்­போது தமது இருப்­பி­டங்­களை விட்டு தலை­ம­றை­வாகி­யுள்­ள­தா­கவும் அவர்கள் தொடர்பில் எவ­ரேனும் தகவல் அறிந்தால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்­ஸாவின் 0718591727 எனும் இலக்­கத்­துக்கு தகவல் தரு­மாறும் பொலிஸார்  வேண்­டுகோள் விடுத்துள்ளனர்.