கம்­பஹா வைத்­தி­ய­சா­லையை அண்­மித்து  நிறுத்­தப்­பட்­டி­ருந்த ஹைபிரிட் ரக சொகுசு காரொன்­றுக்குள் இருந்து நேற்று முன்­தினம் மூன்று ரீ 56 ரக துப்­பாக்­கிகள் மீட்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் குற்றச் செயல் ஒன்­றினை புரி­வ­தற்­காக இந்த துப்­பாக்­கிகள் எடுத்துச் செல்­லப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த போது பொலி­ஸாரின் கண்ணில் பட்­டதால் அவை சந்­தேக நபர்கள் தப்பிச் சென்­றுள்­ள­தாக சந்­தே­கிக்கும் விசா­ர­ணை­யா­ளர்கள், அது தொடர்பில் பல்­வேறு கோணங்­களில் பல குழுக்­களை அமைத்து தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

கறுப்பு நிற ஹைபிரிட் ரகத்தை சேர்ந்த  இந்த காரா­னது மத்­திய மாகா­ணத்தை  சேர்ந்­தது என அதில் இருந்த இலக்­கத்­த­கடு ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது. எனினும் அந்த இலக்­கத்­த­கடு, அதன் நம்­பகத் தன்மை என்­பன தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்ட நிலையில்   சீ.பி. கே.என். 3832 எனும் அந்த இலக்­கத்­த­க­டா­னது போலி­யா­னது என தெரி­ய­வந்­துள்­ளது.

 காரின் உண்மை இலக்­கத்­த­கட்டை அக்­காரில் இருந்து மீட்­டுள்ள பொலிஸார் அதன் ஊடாக அக்­காரின் உரி­மை­யா­ளரை கண்­ட­றிந்து விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளனர். அதன்­படி கம்­பஹா - யக்­கல பகு­தியைச் சேர்ந்த குறித்த உரி­மை­யாளர் காரினை பன்­னி­பிட்­டிய பகு­தியில் உள்ள வாகன வாடகை நிறு­வனம் ஒன்­றுக்கு அதனை ஒப்­ப­டைத்­துள்­ளமை ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த வாகன வாட­கைக்கு விடும் நிறு­வ­னத்தில் இருந்து மட்­டக்­குளி பகு­தியைச் சேர்ந்த ஒருவர் அந்த காரை கடந்த செப்­டம்பர் 29 ஆம் திகதி வாட­கைக்கு பெற்றுச் சென்­றுள்­ள­தாக கண்­ட­றிந்­துள்ள பொலிஸார், அந்த நபரை தேடி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 அத்­துடன் இது தொடர்பில் மேலும் பல தக­வல்கள் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்ள நிலையில் ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்தின் உதவியுடன் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.