தமிழ் மக்கள் தமது அடை­யா­ளத்­தையும்  கௌர­வத்­தையும்  காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்­காக நீண்­ட­காலப் போராட்­டங்­களை நடத்­தி­வந்­துள்­ளனர். அவ்­வா­றான ஆயு­தப்­போ­ராட்­டத்­திற்­கான   கார­ணிகள்  இன்­ன மும் நீடித்து வரு­கின்­றன. எனவே, அவற்­றுக்கு  விரை­வாக தீர்­வு­கா­ணப் ­ப­ட­வேண்டும் என்று  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்  தெரி­வித்தார். 

எமது  நாட்டில் நில­விய  மிகவும்  ஆபத்­தான  நிலை­மை­க­ளி­லிருந்து  நாம் பாடங்­களை கற்­றுக்­கொண்­டுள்ளோம். நாட்­டுப்­பற்று என்ற பெயரில் அதா­வது  போலி நாட்­டுப்­பற்றின் அடிப்­ப­டையில் யாரா­வது  இத்­த­கைய மோச­மான நிலை­மை­களை மேலும்  தொடர  முயற்­சித்தால் அது  பெரும் சோக­மா­கவே  முடியும் என்றும்  அவர்  சுட்­டிக்­காட்­டினார். 

பாரா­ளு­மன்­றத்தின் 70ஆவது ஆண்டு நிறை­வு­வி­ழாவை முன்­னிட்டு நேற்று நடை­பெற்ற  பாரா­ளு­மன்ற விசேட அமர்வில்  கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே  எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். 

இங்கு  அவர்  மேலும்  கூறி­ய­தா­வது:-

இந்தப் பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது அமர்வின் 70 ஆண்­டுகள் நிறைவை முன்­னிட்டு கௌரவ பிர­தம மந்­தி­ரி­யுடன் இணைந்து இப்­பி­ரே­ர­ணையை முன்­வைக்கும் இந்த வாய்ப்பு எதிர்க்­கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்குக் கிடைத்த பெரிய வரப்­பி­ர­சா­த­மாகக் கரு­து­கின்றேன்.

முன்னர் சிலோன் என அறி­யப்­பட்ட இலங்­கையின் கால­னித்­துவ ஆட்­சி­யா­ளரில் இறுதி ஆட்­சி­யா­ள­ரா­கவும் எமக்குச் சுதந்­தி­ரத்தை வழங்கி, வௌிநாட்டார் ஆட்­சி­யி­லி­ருந்து எம்மை விடு­வித்­த­வர்­க­ளு­மா­கிய ஐக்­கிய இராச்­சிய அர­சாங்­கத்தின் சார்பில் கலந்­து­கொண்ட இள­வ­ரசர் குளோ­செஸ்டர் அவர்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் சுதந்­திர பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது அமர்வு 1947 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 14ஆம் திகதி கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்­றது.  நாங்கள் 400 ஆண்­டு­க­ளுக்கு மேலாக, அதைச் சரி­யாகக் கூறு­வ­தானால் 443 ஆண்­டு­க­ளாக வௌிநாட்டார் ஆட்­சியின் கீழ் இருந்தோம்.  

 சபா­நா­யகர் அவர்­களே, தங்கள் அனு­ம­தி­யுடன் இங்கு நான் ஒன்றை ஞாப­கப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.  இலங்­கைக்குச் சுதந்­திரம் வழங்­கப்­பட்ட நிகழ்வு இலங்கைச் சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்­ற­போது ஓர் இளம் சிறு­வ­னாக நான் அந்­நி­கழ்வை நேர­டி­யாக அங்கே பிர­சன்­ன­மா­யி­ருந்து மிகவும் பெரு­மை­யுடன் அவ­தா­னித்தேன்.  எமது முத­லா­வது பிர­தம மந்­திரி  டீ.எஸ்.சேனா­நா­யக்க அவர்கள், சுதந்­திரம் வழங்கும் அந்த ஆவ­ணத்தை இலங்கை மக்­களின் சார்பில் பெற்றுக் கொண்டார்.

அன்று நாங்கள் ஐக்­கி­ய­மான மக்­க­ளாக இருந்தோம்.  இலங்­கையின் எல்லா மக்­களும் இன, மத வேறு­பா­டு­க­ளின்றி வெளி­நாட்டு ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­திரம் பெறவே விரும்­பி­யி­ருந்தோம்.  உண்­மையில் யாழ்ப்­பாண இளைஞர் காங்­கி­ர­ஸா­னது டொமி­னியன் அந்­தஸ்தை விரும்­பாது முழு­மை­யான சுதந்­திரம், அதா­வது புரண சுவ­ராஜ்ஜே வேண்­டு­மென்று தமிழ்­மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.  

கடந்த 70 வருட கால­மாக நாங்கள் தேர்தல் முறை­யூ­டாக ஜன­நா­யக ஆட்­சியைக் காப்­பாற்றி வந்­தி­ருக்­கின்றோம் என்­றாலும், அது குறை காணப்­ப­டாத, புர­ண­மா­ன­தாக இருக்­க­வில்லை என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.  தேர்தல் வழி­முறை மட்டும் ஜன­நா­யக ஆட்சி முறையை உறு­திப்­ப­டுத்த மாட்­டாது என்ற உண்­மையை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.  பெரும்­பான்­மை­வா­தத்தைத் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்குச் சேவை செய்­வ­தையே பெரும்­பாலும் தேர்தல் முறைமை தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது.  பன்­மு­கத்­தன்­மையை ஏற்­றுக்­கொள்­வதும் அதற்கு மதிப்­ப­ளிப்­ப­துமே உண்­மை­யான ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டை­யாக இருக்க வேண்டும். 

பன்­மு­கத்­தன்­மையை ஏற்­றுக்­கொண்டும் அதற்கு மதிப்­ப­ளிக்கும் பொருட்டும் மேற்­கொள்­ளப்­பட்ட அனேக முயற்­சி­களின் விளை­வாக இந்த நாட்டின் மதிப்பு வாய்ந்த தலை­வர்­க­ளுக்­கி­டையில் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்கள் துர்­அ­தி‘்­ட­வ­ச­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.  உள்­நாட்டு உரு­வாக்கம் என உரிமை கோரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்கள் சுய­சே­வைக்கு அப்பால் பன்­மு­கத்­தன்­மையின் தேவை­களை நிறைவு செய்­வ­தற்குச் சேவை­யாற்ற முடி­யா­த­வை­க­ளா­கவும், மாறாகப் பெரும்­பான்­மை­வா­தத்தை மேலும் உறு­திப்­ப­டுத்­து­ப­வை­யா­க­வுமே அமைந்­தி­ருந்­தன.  முழு நாட்­டி­னையும், அதன் மக்­க­ளையும் வெகு­வாகப் பாதிப்­புக்­குள்­ளாக்­கிய நீண்­ட­கால ஆயுதப் போராட்­டத்­தையும், கிளர்ச்­சி­க­ளையும் நாம் கண்­டி­ருக்­கிறோம்.  அவற்றால் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமிழ் மக்­களே.  அவர்கள் தமது அடை­யா­ளத்­தையும், கௌர­வத்­தையும் காப்­பாற்­றிக்­கொள்ள நீண்­ட­காலப் போராட்­டங்­களை நடாத்தி வந்­துள்­ளனர்.  ஆயுதப் போராட்­டத்­திற்­கான கார­ணங்­க­ளாக அமைந்த விட­யங்கள் இன்­னமும் நீடிப்­ப­தனால் அவற்­றிற்கு விரை­வாகத் தீர்வு காணப்­பட வேண்டும்.

எமது நாட்டில் நில­விய மிகவும் ஆபத்­தான நிலை­மை­க­ளி­லி­ருந்து நாம் பாடங்­களைக் கற்றுக் கொண்­டுள்ளோம்.  நாட்­டுப்­பற்று என்ற பெயரில், சரி­யாகச் சொன்னால் போலி நாட்டுப் பற்றின் அடிப்­ப­டையில் யாரா­வது இத்­த­கைய மோச­மான நிலை­மை­களை மேலும் தொடர முயற்­சிப்­பார்­க­ளாயின், அது பெரும் சோக­மா­கவே முடியும்.  முன்பு இருந்த நிலை­மை­க­ளோடு ஒப்­பி­டும்­போது தற்­போ­தைய நிலையில் சில குறை­பா­டுகள் காணப்­பட்­டாலும், கூடு­த­லான அமை­தியும் சுமு­க­நி­லை­மையும் உள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

கணி­ச­மான தேசிய ஒருங்­கி­சைவின் அடிப்­ப­டையில் கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் விவா­தங்கள் ஊடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைக் கண்டு, வன்­மு­றை­களும் மோதல்­களும் அற்ற எதிர்­கா­லத்தை நாட்டில் உரு­வாக்கும் பொருட்டு பல்­வேறு செயல்­மு­றை­களில் நாடு தற்­போது ஈடு­பட்­டுள்­ளது.  இதன் அர்த்தம் யாதெனில், இலங்கை மக்கள் தமது இன, மத வேறு­பா­டுகள் அற்ற வகையில் ஐக்­கி­ய­மான, பிள­வு­ப­டாத,  பிரிக்­கப்­பட முடி­யாத இலங்கை தமது சொந்த நாடு எனவும், இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் தாம் இலங்கைத் தேசத்தில் உள்­ள­டங்­கிய ஒரு பகுதியினர் என்பதையும் விரும்பி ஏற்பார்கள் என்பதேயாகும்.

 எமது பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இலங்கையில் சட்டவாட்சித் தத்துவங்களையும், ஜனநாயக மரபுகளையும் மேலும் பலப்படுத்தி, சுபீட்சம் மிகுந்த அபிவிருத்தியை அடையும் எமது விருப்பத்தை நிறைவேற்றும்.

ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே நாம் முயற்சிக்கிறோம்.  இந்த விடயத்தில் ஏற்காமை எதுவும் இருக்கும் என நான் எண்ணவில்லை.  இலங்கை வெற்றியடைய வேண்டும் என்ற எமது விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்தக் குறிக்கோளை அடைய நாம் அனைவரும் ஐக்கியமாகச் செயற்பட வேண்டியதே அவசியமாகும்.