''புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது வெறும் மாயை''

Published By: Priyatharshan

04 Oct, 2017 | 09:58 AM
image

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்­தத்தை முற்­றாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கே அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற பெயரில் பல்­வேறு  குழப்­ப­மான விட­யங்­களை முன்­வைத்து மக்­களை ஏமாற்­றி­வ­ரு­கின்­றது. 

அத்­துடன் 13ஆம் திருத்தம் முற்­றாக நிறை­வேற்­றப்­பட்டால் நாடு சமஷ்டி ராஜி­ய­மாக மாறு­வதை யாராலும் தவிர்க்க முடி­யாது என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் தலைவர் குண­தாச அம­ர­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பு ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேசிய அமைப்­பு­களின் மத்­திய நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையை வைத்­துக்­கொண்டு அதில் இருக்கும் சில வார்த்­தை­க­ளுக்கு பல­வி­த­மான கருத்­துக்­களை அனை­வரும் தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர். குறிப்­பாக அதில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் ஒற்­றை­யாட்சி முறைமை மற்றும் புத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­குதல் என்ற விட­யங்கள் தொடர்­பா­கவே கதைத்து வரு­கின்­றனர்.

ஆனால் அர­சாங்கம் புதிய அர­சியல் அமைப்பு என்ற பெயரில் அதில் ஒற்­றை­யாட்சி மற்றும் புத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை போன்ற விட­யங்­களை மக்கள் மத்­தியில் பரப்பி குழப்பி இருக்­கின்­றது. இதனால் மக்கள் இந்த விட­யங்கள் தொடர்­பாக மாத்­தி­ரமே பிரச்­சி­னைப்­பட்டு வரு­கின்­றனர். அர­சாங்கம் திட்­ட­மிட்டே இந்த விட­யத்தை மேற்­கொண்­டுள்­ளது. ஏனெனில் மக்கள் இந்த விட­யங்­களில் பிரச்­சினை படும்­போது, இறு­தியில் இவை எத­னையும் நான் நம்­ப­மாட்டேன். 13 ஐ முற்­றாக வழங்­கு­வதே எனது நிலைப்­பாடு என ஜனா­தி­பதி தெரி­விப்பார். இது தான் அர­சாங்­கத்தின் திட்­ட­மாகும்.

மேலும் மக்கள் ஒற்­றை­யாட்சி முறை­யிலும் புத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை என்ற விட­யத்­திலும் ஊரிப்போய் உள்­ள­நி­லையில் 13ஆம் திருத்­தத்தை முற்­றாக நிறை­வேற்ற ஆத­ர­வ­ளிப்­பார்கள். அத்­துடன் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் 13ஐ வழங்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார். அதனால் அதனை வழங்­கு­வதில் எந்த தவறும் இல்லை என்றே தெரி­விப்­பார்கள். 

அத்­துடன் இந்த விடயம் தொடர்­பாக கூட்டு எதிர்க்­கட்சி   போராட்­டங்­களை மேற்­கொள்ள எந்த நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொள்­ள­வில்லை. அர­சாங்கம் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையில் இதனை அங்­கி­க­ரித்­துக்­கொள்ளும் வரை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் 13ஐ முற்­றாக வழங்­கினால் என்ன நடக்கும் என்றும் பல­ருக்கு தெரி­யாது. புதிய அர­சி­ய­ல­மைப்பும் 13ஐ ஒத்­த­தா­கவே தயா­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

ஆனாலும் தற்­போது இருக்கும் 13ஆம் திருத்­தத்தில் சமஷ்டி இல்லை எனறே அனை­வரும் தெரி­விக்­கின்­றனர். ஜே. ஆர். ஜய­வர்த்­தன  ராஜீவ் காந்­தி­யுடன் கைச்­சாத்­தி­டும்­போது 13ஆம் திருத்­தத்தில் பூர­ண­மாக சமஷ்டி இருந்­தது. ஆனால் மாகா­ணங்­க­ளுக்கு  பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் மறுக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஆளு­நர்­களை பத­வி­நீக்கும் அதி­காரம் மறுக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால்தான் சமஷ்டி சாயல் இதில் இல்­லாமல் இருக்­கின்­றது.

என்­றாலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற பெயரில் மக்­களை குழப்பி, தற்­போது மாகா­ணங்­க­ளுக்கு மறுத்­து­வரும் அதி­கா­ரங்­க­ளுடன் 13ஆம் திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தற்கே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இது­தொ­டர்­பாக மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த யாரும் நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை. அத்­துடன்  அர­சாங்கம் ஒரு­போதும் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை தயா­ரிக்­கப்­போ­வ­தில்லை. 20ஆம் திருத்தம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து 13ஆம் திருத்தத்தை முழுமையாக கொண்டுவருவார்கள்.

எனவே 13 நிறைவேற்றப்பட்டால் இந்த நாடு சமஷ்டி ராஜியம் ஆவதை யாராலும் மறுக்கமுடியாது. அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதனை தடுப்பதற்கு நாட்டுக்குள் எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது பாரிய பிரச்சினையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04