கொட்டகலை ஹரிங்டன் கொலனியில் இன்று பகல் ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் வீடொன்று சேதமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திடீர் தீ காரணமாக வீட்டின் ஒரு அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன்,  தளபாடங்கள் உடைகள் உட்பட அத்தியாவசிய ஆவணங்கள், பாடசாலைப் புத்தகங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

வழக்கமாக, எரிந்து நாசமாகிய அறையிலேயே வீட்டில் உள்ள சிறுவர்கள் இருவர் பகல் வேளையில் நித்திரை கொள்வதாகவும், இன்று அவர்கள் அங்கு நித்திரை கொள்ளாததால் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.

மின்சார ஒழுக்கு காரணமாக இத்தீ ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.