படத்தில் காணப்படும் இந்தச் சிறிய பீங்கான் கோப்பை, 37.7 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

சீனாவை ஆண்ட ‘சோங்’ ராஜ வம்சத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் பீங்கான் கோப்பை ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்தது.

ஐஸ் துகள்கள் படர்ந்ததுபோலக் காட்சியளிக்கும் 13 சென்றிமீற்றர் அளவு விட்டம் மட்டுமே கொண்ட இந்தக் கோப்பை, அந்நாட்களில் தூரிகைகளைக் கழுவுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

ஏலத்தின்போது சுமார் 13 மில்லியன் டொலர் ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்டது. எனினும், இருபதே நிமிடங்களில், அதைவிட சுமார் இருபத்து நான்கு மில்லியன் டொலர் அதிக விலைக்கு இந்தக் கோப்பை கோரப்பட்டது.

இதை ஏலத்தில் எடுத்தவர் தனது விபரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.