லிந்துலை பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தோட்ட அதிகாரிக்கெதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று நுவரெலியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் திலகராஜ் கூறியதாவது,

“அண்மையில் விபத்தில் பலியான இளைஞன் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது தோட்ட அதிகாரி மனிதாபிமானம் அற்ற வகையில் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டும் தொணியில் செயற்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகின.

தோட்ட அதிகாரிக்கு கை துப்பாக்கி வைத்திருப்பதற்கு அதிகாரத்தை யார் வழங்கினார்கள் என்பதையும் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதோடு தோட்ட அதிகாரிக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

இவ் இணைப்பு குழு கூட்டம்; சபை இணைத் தலைவர் எஸ்.பீ. ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

மேலும் இக் கூட்டத்தில் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான மயில்வாகனம் திலகராஜ் சக்திவேல் பியசிறி பிலிப் ஆகியோருடன் அரச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.