இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது அமைச்ர் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்கால­மாக அடைந்து வரும் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னமும் விளையாட்­டுத்­துறை அமைச்­சரும் பெரும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் பின்­ன­டைவை சந்­தித்­துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியை மீளக்கட்டியெழுப்ப விளையாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர விசேட செய­ல­மர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் எதிர்­வரும் இரண்டு வரு­டங்­களில் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் மேற்­கொள்ள  வேண்­டிய செயற்­றிட்டம் ஒன்றை தயா­ரித்­துள்ளார்.

இந்த புதிய திட்­டத்தின் படி ஐந்து பேர் கொண்ட ஆலோ­சனைக் குழு ஒன்­றையும் அமைச்சர் நிய­மித்­துள்ளார்.

அதில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்­பவான் குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகி­யோரின் பெயரை பரிந்­து­ரைத்­துள்ளார். அத்­தோடு அர­விந்த டி சில்­வாவும் அதில் இணைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்தக் குழுவில் குமார் சங்­கக்­கார இணைந்­து­கொள்­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்ற நிலையில் மஹே­ல­வுக்கும் அமைச்சர் இதில் இணைந்து­கொள்­ளு­மாறு அழைப்பு விடுத்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்நிலையிலேயே குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா போன்ற மூத்த வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று சந்திப்பை மேற்கொள்வுள்ளார்.

கிரிக்கெட் குறித்த ஞானமும் அதன் செயல்­முறை பற்­றிய சிறந்த அனு­ப­வமும் கொண்­டுள்ள சங்­கக்­கார இலங்கைக் கிரிக்கெட் அணியைக் கட்­டி­யெ­ழுப்பும் செயற்­றிட்­டத்தில் இணைந்து கொண்டால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும்.