யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நல்லூர் பின் வீதி நாற்சந்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வாகனத்தில் சென்றபோது கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தார்.

இதனையடுத்து, இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்ததற்கமைய கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.