சீயான் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டில் வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கு சாமி  2 என்று பெயரிடாமல் சாமி ஸ்கொயர் (சாமி 2) என்று பெயரிட்டுள்ளார் இயக்குநர் ஹரி.

மேலும் இது குறித்து பேசும் போது,‘பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் அப்படத்தின் பெயரிட்டு அருகில் 2 என்றோ 3 என்றோ இடம்பெறவைப்போம். ஆனால் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தினை சாமி ஸ்கொயர் என்று வைத்திருக்கிறோம். ஸ்கொயர் என்றால் கணிதத்தில் இரண்டு மடங்கு என்று பொருள் வரும். அதே போல் இதிலும் சாமி படத்தினைப் போல் இரண்டு மடங்கு ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. இதில் திரிஷா கௌரவ வேடத்தில் நடிக்கவில்லை என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன். அவரும், மற்றொரு நடிகையான கீர்த்தி சுரேசும் சம வாய்ப்புள்ள நாயகிகளாகத்தான் நடிக்கவிருக்கிறார்கள்.‘என்றார்

இயக்குநர் ஹரி கூறுவதைப் பார்த்தால் சாமி படத்தில் தந்தை மகன் என் இரண்டு கேரக்டர்கள் விக்ரமிற்கு இருக்கும் என்றும், படத்திற்கு வேறு பெயரை விரைவில் அறிவிப்பார்கள் என்றும் ரசிகர்கள் அவதானிக்கிறார்கள். 

தகவல் : சென்னை அலுவலகம்