கலஹா பிர தேசத்தில் உற­வி­னர்களால் கடு­மை­யான  முறையில்  சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்ட  12 வயது சிறு­னொ­ரு­வனை  பொலிஸார் மீட்டு, வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

மேற்­படி குற்­றத்தை புரிந்­த­தாக நம்­பப்­படும் சிறு­வனின் அண்ணன், அண்ணி, மைத்­துனர் உட்­பட மூன்று சந்­தேக நபர்­க­ளையும் பொலிஸார்   கைது செய்­துள்­ளனர். 

தெல்­தோட்டை பிர­தே­சத்தில் எதிர்­வரும் 11 ஆம் திகதி இடம்பெற உள்ள நிகழ்வு ஒன்­றுக்கு ஜனா­தி­ப­தியின் வரு­கையை முன்­னிட்டு பாது­காப்­புக்­காக சென்­றி­ருந்த கம்­பளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­தகர் தன­பால தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரே குறித்த சிறு­வனின் நிலை ­கண்டு கலஹா பொலி­ஸா­ரூ­டாக  சிறு­வனை மீட்­டுள்­ளனர்.

இச்­ சம்­பவம் கலஹா பொலிஸ் பிரி­வுக்­குட்பட்ட தெல்­தோட்டை மெத­கெ­கில பகு­தி­யி­லேயே நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக் கி­ழமை மாலை­ இடம்பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

கொழும்பு கொம்­பனி வீதி­யை ­சேர்ந்த குறித்த சிறு­வனின்  குடும்­பத்தில்  தந்தை இறந்­ததன் பின்னர் தாய் வெளி­நாட்­டுக்கு வேலை வாய்ப்பு பெற்று சென்­றுள்ளார். இந் நிலையில் சிறு­வனின் மூத்த சகோ­தரன் கலஹா பகு­தி­யை ­சேர்ந்த யுவதி ஒரு­வரை திரு­மணம் முடித்து மனை­வியின் வீட்டில் வசித்து வந்­துள்ளார். 

 வெளி­நாட்­டி­லி­ருக்கும் தாயிடம் மாதம் 10 ஆயிரம் ரூபா பணம் பெற்­றுக்­கொண்டு பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னான தனது தம்­பியை பரா­ம­ரிக்கும் பொறுப்­பி­னையும் ஏற்­றி­ருந்­துள்ளார். இந்­நி­லையில் பாட­சா­லைக்­கு­கூட அனுப்­பப்­ப­டாமல் இருந்த குறித்த சிறு­வ­னுக்கு போதிய அளவு உணவு கொடுக்­கா­மை­யினால் சிறுவன் வீட்­டி­லுள்ள அரிசி, சீனி போன்­ற­வற்றை கள­வாக உட்கொண்­ட­தை­ய­டுத்து சிறு­வனின் அண்­ணனின் ஒத்­து­ழைப்­போடு அண்­ணியும் அண்­ணியின் சகோ­த­ர­னான மைத்­து­னரும்  இணைந்து  குறித்த சிறு­வனின் கை கால் தலை உட்­பட அனைத்து இடங்­க­ளிலும் சூடு வைத்­துள்ளனர்.  

அத்­துடன் பாரிய இரண்டு மரக்­கட்­டை­களை சிறு­வனின் காலு­க­ளுக்­கி­டையில் வைத்து நகர முடி­யாத படி தினமும் செய்­து­வந்­துள்­ள­தாக விசா­ர­ணைகள் மூலம் தெரிய வந்­துள்­ளது. 

மீட்­கப்­பட்ட சிறு­வனின் உட­லெங்கும் தீ காயங்கள், கத்­தியால் வெட்­டிய காயங்கள் உட்­பட அடி காயங்­களும் காணப்­ப­டு­வ­தோடு மரக்­கட்­டையை கொண்டு சித்­தி­ர­வதை செய்­த­தினால் கால்கள் இரண்டும் நடக்க முடி­யாது உள்­ள­தாக பரி­சோ­தித்த வைத்­தி­யர்கள் தெரிவித்துள்ளனர்.   

இதனையடுத்து குறித்த சிறுவன் முதலில் கலஹா வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர்   நேற்று காலை  மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.