இந்தியாவின் திருப்பூர் அருகே  தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு மாணவன்  1ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை  கல்லால் அடித்து கொலை செய்துள்ளான்.

பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன்பு முதலாம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்ற 6ஆம் வகுப்பு மாணவன், அந்த மாணவனை கல்லால் தாக்கியுள்ளான். 

இதனை கவனித்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம்  தெரிவிக்க இதையடுத்து கழிவறைக்குள் சென்று பார்த்த ஆசிரியர்கள் தலையில் இரத்த காயங்களுடன் அந்த மாணவன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

6ம் வகுப்பு மாணவனை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப்பள்ளில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.