அமெ­ரிக்க- –இலங்கை  கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான கடற்­படை கூட்­டு­ ப­யிற்­சி ­களை நடத்தும் வகையில் அமெ­ரிக்க போர்க்­கப்­ப­லான யு.எஸ்.எஸ். கொர­னாடோ திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை வந்­த­டைந்­துள்­ளது.  அந்­த­வ­கையில்  ஐந்து நாள்   கூட்டுப் பயிற்சி   திரு­கோ­ண­மலைத்துறை­மு­கத்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. 

கரட்- 2017 எனப்­படும் ‘கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்­து­ழைப்பு- 2017 கூட்டுப் பயிற்­சி­களை முன்­னெ­டுக்க இலங்கை கடற்­படை மற்றும் அமெ­ரிக்க பசுபிக் கப்­பற்­ப­டையும் இணைந்து ஒழுங்கு செய்­துள்­ளன. ஆண்டு தோறும் இடம்­பெறும் இந்த இணைந்த கடற்­படை கூட்­டுப்­ ப­யிற்­சிகள் இம்­மு­றையும் திரு­கோ­ண­ம­லையில் ஆரம்­ப­மா­கின்­றன.  

கடல்சார் பாது­காப்பு முன்­னு­ரி­மைகள், படை­க­ளுக்­கி­டை­யி­லான இயங்­கு­தன்­மையை வலுப்­ப­டுத்தல், தெற்கு மற்றும் தெற்­கி­ழக்­கா­சிய நாடு­களின் படை­க­ளுக்­கி­டையில் நிலை­யான கடற்­படை ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்தல் ஆகிய நோக்­கங்­களின் அடிப்­ப­டையில் இந்தப் பயிற்­சிகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

இந்­நி­லையில் கூட்டு கடற்­படை பயிற்­சி­க­ளுக்கு பங்­கு­பற்றும்  அமெ­ரிக்க போர்க்­கப்­ப­லான யு.எஸ்.எஸ். கொர­னாடோ  நேற்று திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. இவ்வாறு வந்தடைந்த யுஎஸ்எஸ் கொரனாடோ போர்க்கப்பல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.