இந்த வரு­டத்­துக்­கான  மருத்­து­வத்­துக்­கான  நோபல் பரிசை  அமெ­ரிக்க விஞ்­ஞா­னி­க­ளான ஜெப்ரி ஹோல், மைக்கேல் ரொஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோர் வென்­றெ­டுத்­துள்­ளனர்.

மனித உடல் நலம் மற்றும் ஆரோக்­கி­யத்­துக்கு பங்­க­ளிப்பு செய்யும் வகையில் உடல் கடி­காரம் (உயி­ரியல் கடி­காரம்)  குறித்து ஆய்வை மேற்­கொண்­ட­மைக்­கா­கவே அவர்­க­ளுக்கு மேற்­படி பரிசு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக  நோபல் பரிசு சபை தெரி­வித்­தது.மனித உட­லுக்குள் இயங்கும் மேற்­படி உடல் கடி­கா­ர­மா­னது  அவர்­க­ளது உணர்­வு­நிலை,  உடல் வெப்­ப­நிலை உள்­ள­டங்­க­லாக அனைத்­தையும் பாதிப்­ப­தாக விஞ்ஞானிகள்  தமது ஆய்வில் கண்டறிந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.