(எம்.ஆர்.எம்.வஸீம்)

சந்தையில் தேங்காயின் விலை 100 ரூபா வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றதால், பொது மக்களின் நலன் கருதி தெங்கு உற்பத்தி திணைக்களம் 65 ரூபா என்ற குறைந்த விலைக்கு தேங்காய் விற்பனைசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்களினூடாக சென்று தேங்காய் விற்பனைசெய்யும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Image result for தேங்காய் virakesari

இவ்வாறு வாகனங்களில் வந்து விற்பனை செய்யப்படும் தேங்காயை ஒருவர் 10 காய்கள் வரையில் கொள்வனவு செய்யலாம். அத்துடன் வாகனங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தேங்காய்களை கடை உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டு கூடியவிலையில் விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.