2016 ம் வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை நிதிச்சீட்டி பாவனை காலத்தை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

வழங்கப்பட்ட குறித்த நிதிச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் ஜனவரி 31 வரை மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்நிலையில் ,குறித்த நிதிச்சீட்டின் கால எல்லையை பெப்ரவரி மாத இறுதிவரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.