மும் மொழிகளிலும் வவுனியாவில் அரசாங்கத்திற்கெதிரான சுவரொட்டிகள்

Published By: Digital Desk 7

02 Oct, 2017 | 01:01 PM
image

"அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய், மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்ற பொருட்கள் விலையும், வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு" என்று மும் மொழிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச் சுவரொட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த விலை வாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகிறது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும், அரசாங்கத்தினையும் மிக மிக பாதித்துள்ளது. உண்மையிலேயே நல்லாட்சி வந்த பிறகு இந்த பொருட்களின் விலையேற்றம் மிக கடுமையாக காணப்படுகிறது.

கிராமப்புற மக்களுக்கும் சரி, ஏழை மக்களுக்கும் சரி தேங்காய் உணவுப் பொருட்களில் அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகிறது. கஞ்சி வைத்து குடிப்பதாக இருந்தாலும் சரி அரிசியும் தேங்காயும் தான் தேவைப்படுகிறது.  அதற்கு கூட வழியில்லாமல் செய்துள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம்.

இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையிலேயே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் போதாமல் உள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடான விலை  நிர்ணயத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும். 

மக்கள் சிரமமில்லாமல் எளிதான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46