“நீண்ட கால தமிழர் விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, தந்தை செல்வாவின் வழியில் வழி நடாத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரினமித்து தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியிலான ஒரு ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் ” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தழிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,

“நீண்டகாலமாக சிங்கள அரசுகள் தமிழினத்தை ஏமாற்றி வருகின்ற  வரலாறுகள் நாங்கள் அறிந்தவையே துரதிஷ்டவசமாக எமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது தமிழ் மக்கள் இன்று நம்பிக்கையின்றி ஒரு விளிம்பில் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமே” என தெரிவித்தார்.