அர­சி­யலில் வெற்றி பெறும் ரக­சி­யத்தை கேட்டால் "என் கூட வா" என அழைக்­கிறார் கமல்­ஹாசன் என நடிகர் ரஜி­னிகாந்த் பேசி­யது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

சென்னை அடை­யாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்­டபத் திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. இந்­நி­கழ்ச்­சியில் நடிகர் ரஜி­னிகாந்த் பேசி­ய­தா­வது சிவாஜி என்னும் மகா­னுடன் பழ­கி­யி­ருக்­கிறோம் என்­பது நமக்­கெல்லாம் பெருமை. தற்­போது நடை­பெ­று­வது அர­சியல், சினிமாத்துறை கலந்த ஒரு விழா.  சுதந்­திரப் போராட்ட தியா­கி­களை கண் முன் கொண்டு வந்து காட்­டி­யவர் சிவாஜி கணேசன்.

கடவுள் மறுப்பு காலம் உச்­சத்தில் இருந்­த­போது ஆன்­மிக படங்­களில் அவர் நடித்­துள்ளார்.  அவர் சொந்த தொகு­தியில் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்­தது அவ­ருக்கு அவ­மானம் இல்லை. அவ­ரது தொகுதி மக்­க­ளுக்­குத்தான் அவ­மானம். இறந்த பின் மண்ணோடு மண்­ணாக போகின்ற­வர்­க­ளிடம் பழ­கு­கிறோம், இறந்த பின் சாம்­ப­லாக போகின்ற­வர்­க­ளிடம் பழ­கு­கிறோம் ஆனால் இறந்த பின் சிலை­யாக போகின்ற­வ­னிடம் பழ­கு­வது ரொம்ப அபூர்வம்.

பல கோடியில் ஒருவர் தான் இறந்த பின் சிலை­யா­வார். அப்­படி ஒரு மகா­னிடம் நாம் பழ­கி­யி­ருக்­கிறோம் என்­பது நமக்கு மிகப்­பெ­ரிய பெருமை. வீட்டில் ஆயிரம் சிலைகள் வைத்துக் கொள்­ளலாம். ஆனால் அரசால் சிலை வைக்கப்படுவது பெருமை. அர­சி­யலில் வெற்றி அடைய சினிமா புகழும், பெயரும் மட்டும் போதாது.

மக்­களின் ஆத­ரவும் தேவை. அர­சி­யலில் வெற்றி பெறு­வது எப்­படி என்ற ரக­சியம் கமல்ஹாச­னுக்கு தெரிந்­தி­ருக்கும். ஒருவேளை அந்த ரக­சி­யத்தை 2 மாதங்­க­ளுக்கு முன்னால் கேட்­டி­ருந்தால் அவர் சொல்­லி­யி­ருப்­பாரோ என்­னவோ. தற்­போது திரை­யு­லகில் மூத்த அண்ணன் நீங்கள், நான் உங்கள் தம்பி. எனக்கு இந்த ரக­சி­யத்தை சொல்­லுங்கள் என்றால் 'நீ கூடவா சொல்­கி­ன்றேன்' என்று சொல்­கிறார்.

அந்த ரக­சி­யத்தை கேட்டால் என்­னுடன் அர­சி­ய­லுக்கு வாருங்கள் அழை த்து செல்­கிறேன் என்­கிறார். துணை ­மு­தல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் ரொம்ப அதிர்ஷ்­ட­சாலி. அது பல­முறை நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. அத­னால்தான் காலா­கா­லத்­துக்கும் உயர்ந்து நிற்கப் போகும் இந்த மணி­மண்­ட­பத்தை திறக்கும் பாக்­கியம் ஓ.பி.எஸ்­.ஸுக்கு கிடைத்துள்ளது. சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட முன்வந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயல லிதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.