ஏற்­று­ம­தி வருமானத்தின் தொடர்ச்­சி­யான அதி­க­ரிப்பு மற்றும் வெளிநாட்டு உட்­பாய்ச்­சல்­களின் அதி­க­ரிப்­பினால் நாட்டின் வெளி நாட்­டுத்­துறை செயற்­பா­டுகள் விருத்­தி­ய­டைந்த போதிலும் அதி­க­ரிக்கும் இறக்­கு­மதி செல­வினத்தால் வர்த்­த­க நிலுவை தொடர்ந்தும் அதி­க­ரித்து பதி­வாகி வரு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் வர்த்தக நிலுவை பற்­றாக்­கு­றை­யா­னது 575 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இது கடந்த ஆண்டுஇதே காலப்­ப­கு­தியில் பதிவுசெய்யப்பட்ட 541 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருடன் ஒப்­பி­டு­கையில் 34 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் அதி­க­ரிப்­பாகும்.  அதேபோல் 2017 ஆம் ஆண்டின் முதல் ஏழு­மாத காலப்­ப­கு­தியில் ஒன்று சேர்­ந்த அடிப்­ப­டையில் கடந்த ஆண்டு இதே காலப்­ப­கு­தியில் பதிவு செய்த 4732 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ரி­லி­ருந்து 5329  மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக அதி­க­ரித்து பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இறக்­கு­மதி செல­வி­னமே இந்த அதி­க­ரிப்­புக்கு முக்­கிய கார­ணி­யாக அமைந்­துள்­ளது.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இறக்­கு­ம­திகள் மீதான செல­வினம் 1,591 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதிவுசெய்து  11.1 சத­வீத ஆண்­டிற்கு ஆண்டு வளர்ச்­சியைப் எட்­டி­யுள்­ளது. இவ்­வ­ளர்ச்­சிக்கு இடை­நி­லைப்­பொ­ருட்கள் மீதான உயர்ந்­த­ள­வான செல­வி­னங்கள் முக்­கிய பங்­கினை வகித்­துள்­ளது.

அதேபோல் 2017 இன் முதல் ஏழு மாதகாலப்­ப­கு­தியில் இறக்­கு­மதிச் செல­வி­னங்கள் 11,742 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக 9.2 சத­வீ­தத்தால்  அதி­க­ரித்­துள்­ளது. எரி­பொருள், தங்கம் மற்றும் புட­வைகள் மற்றும் புடவை பொருட்கள் ஆகி­ய­வற்றின்  இறக்­கு­ம­திகள் மீதான அதி­க­ரித்த செல­வி­னத்தின் கார­ணத்தால் இக்­கா­லப்­ப­கு­தியில் இடை­நி­லைப்­பொ­ருட்­களின் இறக்­கு­மதி மீதான செல­வினம் 902 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு 28 சத­வீ­தத்தால் ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு அதி­க­ரித்து பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அதேபோல்  ஜூலை மாதத்தில் எரி­பொருள் இறக்­கு­ம­திகள் மீதான செல­வி­னங்கள்  51.7 சத­ வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது. சர்­வ­தேச சந்­தையில் எரி­பொ­ருளின் உயர்­வான விலை­களின் தாக்­கத்தின் பிர­தி­ப­லிப்­புக்­க­ளுடன் இறக்­கு­மதி அள­வு­களில் ஓர் வீழ்ச்சி பதி­வு­செய்­யப்­பட்ட போதிலும் 2017 ஜூலை மாதத்தில் மச­கெண்­ணெயின் இறக்­கு­மதி மீதான செல­வினம் 2.8 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­தது.

அத்­துடன் இறக்­கு­மதி செலவு அதி­க­ரிப்­புக்கு மற்­று­மொரு கார­ணி­யாக தங்க இறக்­கு­மதி செலவு அதி­க­ரிப்­பு காரண­மாக காணப்­பட்­டுள்­ளது. அந்த வகையில்  இக்­கா­லப்­ப­கு­தியில் தங்க இறக்­கு­ம­திகள் மீதான செல­வினம் 62 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக 182 சத­வீத அதி­க­ரிப்பு போக்கை பதிவு செய்­துள்­ளது. இதற்கு பிர­தான காரணம் தங்க இறக்குமதி அதி­க­ரிப்­பாகும்.

இதே வேளை புட­வைகள் மற்றும் புடவை பொருட்கள் மீதான இறக்­கு­மதிச் செல­வி­னங்கள் ஜூலை மாதத்தில் 19.7 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்­தது. அதே­வேளை, ஆண்டு காலப்­ப­கு­தியில், அடிப்­படை உலோ­கங்கள், கோதுமை மற்றும் சோளம் மற்றும் உணவு தயா­ரிப்­புக்கள் போன்­ற­வற்றின் உயர்ந்­த­ள­வான இறக்­கு­ம­திகள், இடை­நி­லைப்­பொ­ருட்கள், இறக்­கு­ம­தி­களின் அதி­க­ரிப்பு நோக்கிப் பெரிதும் பங்­க­ளித்­தன.

இருப்­பினும், கனிம உற்­பத்­திகள் மீதான இறக்­கு­மதிச் செல­வி­னங்கள் 2017 ஜூலை மாதத்தில் 67.6 சத­வீ­தத்தால்  வீழ்ச்­சி­ய­டைந்து 2016 ஜூலையில் சீமெந்துக் கட்­டி­களின் உயர்ந்­த­ள­வான இறக்­கு­ம­தி­களின் கார­ண­மாக அடிப்­படை விளை­வு­களைப் பிர­தி­ப­லித்­தது.

அதே­வேளை, உண­வல்­லாத நுகர்­வுப்­பொ­ருட்­களின் ஓர் வீழ்ச்சி காணப்­பட்­ட­மைக்கு மத்­தி­யிலும் உணவு மற்றும் குடி­வ­கை­களின் அதி­க­ரித்த இறக்­கு­மதி கார­ண­மாக 2017 ஜூலை மாதத்தில் நுகர்­வுப்­பொருள் இறக்­கு­மதி மீதான செல­வி­னங்கள் 334 மில்­லியன் அமெரிக்க டொல­ருக்கு  3.4 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­தது. 

அதற்­கி­ணங்க, சரா­சரி இறக்­கு­மதி விலை­களில் குறை­வொன்று காணப்­பட்ட போதிலும், உள்­நாட்டுச் சந்­தையில் காணப்­பட்ட பற்­றாக்­கு­றை­யினை நிவர்த்தி செய்­வ­தற்­காக அரிசி இறக்­கு­மதி செய்­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களைத் தொடர்ந்து அரி­சியின் இறக்­கு­ம­தியில் பதி­வு­செய்­யப்­பட்ட குறிப்­பி­டத்­தக்க அதி­க­ரிப்பின் கார­ண­மாக இம்­மாத காலப்­ப­கு­தியில் அரிசி இறக்­கு­மதி மீதான செல­வினம் தொடர்ந்தும் அதி­க­ரித்­தது.

மேலும், உந்து ஈரு­ளிகள் மற்றும் உந்து ஊர்­தி­களின்  இறக்­கு­ம­தியில் ஏற்­பட்ட அதி­க­ரிப்பின் விளை­வாக 2017 ஜூலையில் தனிப்­பட்ட ஊர்­திகள் மீதான இறக்­கு­மதிச் செல­வி­னங்­களும் 15.9 சத­வீ­தத்தால்  அதி­க­ரித்­தது. 

எனினும், 2017 ஜூலை மாதத்தில் வாச­னைத்­தி­ர­வி­யங்கள், சீனி, காய்­க­றிகள், ஆடைகள் மற்றும் துணைப்­பொ­ருட்கள் ஆகி­ய­வற்றின் இறக்­கு­மதிச் செல­வி­னங்­கள்­வீழ்ச்­சி­யொன்­றினைப் பதி­வு­செய்­துள்­ளது.

அதேபோல் முத­லீட்­டுப்­பொ­ருட்கள் மீதான இறக்­கு­மதிச் செல­வினம் 352 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு 12.7 சத­வீ­தத்­தி னால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இம்­மாத காலப்­ப­கு­தியில் பொறி மற்றும் கரு­விகள் மீதான செல­வினம் 13.2 சத­வீ­தத்தால் வீழ்ச்­சி­ய­டைந்­தது. அத்துடன்  கட்­டட மூலப்­பொ­ருட்கள் மீதான இறக்­கு­மதிச் செல­வி­னங்­களும் 8.0 சத­வீ­தத்­தால்­வீழ்ச்­சி­ய­டைந்­த­மைக்கு சீமெந்து, இரும்பு, உருக்கு மற்றும் உருக்­கி­லான ஆப­ர­ணங்கள் ஆகி­ய­வற்றின் குறைந்­த­ள­வான இறக்­கு­ம­தி­களே கார­ண­மாகும். 

அதேபோல் ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து  அவ­தா­னிக்­கப்­பட்ட மேல் நோக்­கிய தொடர்ச்­சி­யான போக்கு, ஆண்டுக் காலப்­ப­கு­தியில் இரண்­டா­வது தட­வை­யாக ஏற்­று­தி­க­ளி­லி­ருந்­தான வரு­வாய்கள்  ஜூலை மாதத்தில் 1 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை கடந்­துள்­ளது.

அத்­துடன் ஒன்று சேர்ந்த அடிப்­ப­டையில் தேயிலை, போக்­கு­வ­ரத்துச் சாத­னங்கள், பெற்­றோ­லிய உற்­பத்­திகள், வாச­னைத்­தி­ர­வி­யங்கள் மற்றும் கட­லு­ணவு ஆகி­ய­வற்­றி­லி­ருந்து பெறப்­பட்ட அதி­க­ரித்த வரு­வாய்­களின் கார­ண­மாக, 2017 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாத காலப்­ப­கு­தியில் ஏற்­று­ம­தி­க­ளி­லி­ருந்­தான வரு­வாய்கள் 6,413 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு 6.5 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது.

இதன்­படி, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்­று­ம­தி­க­ளி­லி­ருந்­தான வரு­வாய்கள் 1,016 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக காணப்­பட்டு ஆண்­டுக்­காண்டு வளர்ச்­சி­யாக 13.9 சத­வீ­தத்­தினைப் பதி­வு­செய்­தது.  இவ்­வ­ளர்ச்­சிக்கு கைத்­தொழில் ஏற்­று­ம­திகள் மற்றும் வேளாண்மை ஏற்­று­ம­திகள் பிர­தான கார­ணி­யாக அமைந்­துள்­ளது.

2017  ஆம் ஆண்டு  ஜூலைமாதத்தில் கைத்­தொழில் ஏற்­று­ம­தி­க­ளான வரு­வாய்கள் 757 மில்­லி­யன் அமெ­ரிக்க டொல­ருக்கு 11.6 சத­வீ­தத்­தினால் வளர்ச்­சி­யடைந்­தது.

இந்­நி­லையில் இக்­கா­லப்­ப­கு­தியில் வேளாண்மை ஏற்­று­ம­தி­க­லி­ருந்­தான வரு­வாய்கள் 253 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக  21.8 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­துள்­ளது.

இக்­கா­லப்­ப­கு­தியில்  சுற்­று­லா­வி­லி­ருந்­தான வரு­வாய்கள் 352.5 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக  விளங்­கி­ய­துடன் ஆண்டின் முதல் ஏழு­மாத காலப்­ப­கு­தியில் சுற்­று­லா­வி­லி­ருந்­தான ஒன்­று­சேர்ந்த வரு­வாய்கள் 2016 இதை­யொத்த காலப்­ப­கு­தியின் 2,013.5 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருடன் ஒப்­பி­டு­கையில் 2,086.1 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­தது பதி­வா­கி­யுள்­ளது.

அதேபோல் 205,482 சுற்­றுலாப் பய­ணி­களின் வருகையின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 1.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. எனினும், ஒன்றுசேர்ந்த அடிப்படையில், 2017இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2016இன் இதையொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1,215,926 சுற்றுலாப் பயணிகளை பதிவுசெய்து 3.6 சதவீத அதிகரிப்பைப் பதிவுசெய்தது.

இந்நிலையில் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட போக்கினை மாற்றி, 2017 ஜூலையில்  தொழிலாளர் பணவனுப்பல்கள் 592.1 மில்லியன் அமெரிக்க டொலராக விளங்கி ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.4 சதவீதமானதொரு வளர்ச்சியைப் பதிவுசெய்தது. எனினும், 2017 ஆம் ஆண் டின் முதல் ஏழுமாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் ஒன்றுசேர்ந்த உட்பாய்ச்சல்கள் 2016இன் இதை யொத்த காலப்பகுதியின் 4,185.9 மில்லியன் அமெரிக்க டொலருடன்  ஒப்பிடுகையில்  3,946.7 மில்லியன் அமெரிக்க டொலருக்கு 5.7 சதவீத வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.