இலங்கை அணிக்­கெ­தி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியின் முதல் இன்­னிங்ஸில் பாகிஸ்தான் அணி 422 ஒட்­டங்­களைப் பெற்று இலங்­கையை மூன்று ஓட்­டங்­களால் முந்­தி­யது.

தற்­போது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆடி­வரும் இலங்கை அணி 69 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து இக்­கட்­டான நிலையில் ஆடி வரு­கி­றது.

இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட் போட்டி அபு­தா­பியில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது.

இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி, தனது முதல் இன்­னிங்ஸில் 419 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்­தது. இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் அதி­க­பட்­ச­மாக 155 ஓட்­டங்­களைக் குவித்து கடைசி வரை ஆட்­ட­மி­­ழக்­காமல் இருந்தார்.  திமுத் கரு­ணா­ரத்ன 93 ஓட்­டங்­க­ளையும், திக்­வெல்ல 83 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

இதைத்­தொ­டர்ந்து ஆட­வந்த பாகிஸ்தான் அணி, 2-ஆம் நாள் ஆட்­டத்தின் முடிவில் விக்கெட் இழப்­பின்றி 64 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. அதைத் தொடர்ந்து மூன்­றா­வது நாளை ஆரம்­பித்த பாகிஸ்தான் அணி நிதா­ன­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி ஓட்­டங்­களை சேர்த்­தது. 

அசார் அலியும், ஆசாத் ஷபிக்கும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை வலுப்­ப­டுத்­தினர். 3-ஆவது விக்­கெட்­டுக்கு இரு­வரும் இணைந்து 79 ஓட்­டங்­களை சேர்த்த நிலையில், ஆசாத் ஷபிக் 39 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

மறு முனையில் உறு­தி­யாக ஆடிய அசார் அலி 139 பந்­து­களில் தனது அரைச் சதத்தை பெற்றார். 

அவர் 32 ஓட்­டங்­களை எடுத்­த­போது டெஸ்ட் போட்­டி­களில் 5 ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்தார்.

இதன்­மூலம் 5 ஆயிரம் ஓட்­டங்­களைக் கடந்த 8ஆ-வது பாகிஸ்தான் துடுப்­பாட்ட வீரர் என்ற சாத­னையைப் படைத்தார். 

4 விக்கெட்டுக்கள் இழப்­புக்கு 266 ஓட்­டங்­களை பெற்று மூன்­றா­வது நாளை முடித்த பாகிஸ்தான் அணி நேற்­றைய நான்­கா­வது நாளில் 422 ஓட்­டங்­களைப் பெற்று மூன்று ஓட்­டங்­களால் இலங்­கையை முந்தி ஆட்­ட­மி­ழந்­தது. 

பந்­து­வீச்சில் அசத்­திய ஹேரத் 5 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். 

அவ­ருக்கு துணை­யாக லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தினர்.

இத­னை­ய­டுத்து இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த இலங்கை அணிக்கு ஆரம்பம் ஒன்றும் அவ்­வ­ளவு சிறப்­பாக அமை­ய­வில்லை.

நேற்­றைய நாளின் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 69 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து இக்­கட்­டான நிலையில் ஆடி வருகிறது. 

களத்தில் குசல் மெண்டிஸ் (16), சுரங்க லக்மால் (2) உள்­ளனர். பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடிவரும்இலங்கை அணி இன்றைய கடைசி நாளின் மதிய நேர உணவு இடைவேளை வரைதாக்குப் பிடித்து ஆட வேண்டி யது கட்டாயமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.