(லியோ நிரோஷ தர்ஷன்)

மகளை தொலைத்த யாழ்.தாயின் கதறலை ஐ. நா. பாதுகாப்பு சபையில்  எடுத்துரைத்து இலங்கை அரசாங்கத்தின்  பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.  

காணாமற்போனோர் குறித்த பொறுப்புக்கூறலின் பூகோள சவால்கள் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு சபையின் முறைசாரா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் இவ்வாறு தெளிவுப்படுத்தியுள்ளார்.  

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களுக்கு மேலும் தெளிவுப்படுத்துகையில் இ

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் நோக்கில் அண்மையில் இலங்கை மற்றும் மெக்சிகோ ஆகிய இரண்டு நாடுகளுக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்து. இந்த இரு நாடுகளிலுமே பெருந்தொகையானோர் காணாமற்போயுள்ளனர். ஆனால் அவற்றுக்கு பொறுப்புக் கூறும் வகையில் அதிகாரிகள் செயற்படமை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேதணையளிக்கின்றது.

எனது இலங்கை விஜயத்தின் போது காணாமற்போனோர் குறித்து பலரையும் சந்தித்து கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. குறிப்பாக யாழ்பாணத்திற்கு சென்றிருந்தேன். இதன் போது இ16 வயது மகளை இராணுவ சீருடையில் வந்தவர்கள் கடத்திய போது அதை தடுக்க முற்பட்ட வேளை தாயும் தாக்கப்பட்டு கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத்தில்  இடம்பெற்றுள்ளது.  பாதிக்கப்பட்ட அந்த தாயை எனது இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் வைத்து சந்திக்க கிடைத்தது .

அவர் தனது அனுபவத்தை கண்ணீர் மல்க என்னுடன் பகிர்ந்து கொண்டார் . கடந்த 6 வருடங்களில் ஒவ்வொரு நாளும் கடத்தப்பட்ட மகளை தேடி இந்த தாய் ஒவ்வொரு இடமாக சென்றுள்ளார். ஆனால் இன்று வரை மகள் தாயிற்கு கிடைக்க வில்லை . அவர் தொடர்பான எந்த தகவலும் இன்னும் இல்லை. 

இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் இலங்கையில் மாத்திரம் அல்ல மெக்சிகோவிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் கடத்தப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பில்  அரசாங்கம் மரண சான்றிதழ் வழங்குவதாகவும் அண்மையில் அறிவித்தது.