பிரான்ஸ் நகரின் தெற்கு பகுதியிலமைந்துள்ள மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கத்தியால் தாக்குதல் மேற்கொண்ட மர்மநபரை பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

குறித்த ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர், `அல்லாஹு அக்பர்` என உரக்கக் கத்தியவாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்னர்.

இறந்த இருவரும் 17 மற்றும் 20 வயதுடைய பெண்கள் என்றும், ஒருவர் கழுத்து அறுபட்டும், மற்றொருவர் கத்தியால் குத்தப்பட்டும் இறந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.