- ராம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு யோசனைகள் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் அவை ஆராயப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாராளுமன்றமே இறுதி தீர்வை எடுக்கும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

Image result for அமைச்சர் ராஜித சேனாரட்ன virakesari

களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரட்னவிடத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.