காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Image result for காட்டு யானை virakesari

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை  வெலிக்கந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில்  ஏறாவூர்  மிச்நகரைச் சேர்ந்த மஹ்ரூப் முஹம்மத் அனீஸ் (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இவர் ரிதிதென்னயில் உணவு விடுதி நடாத்தி வருகின்றார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில்  கடைக்கு பொருட்கள்  வாங்குவதற்காக ரிதிதென்னயிலிருந்து வெலிக்கந்தைக்குச் சென்ற போது மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை காட்டு யானைகள் கூட்டம் அவரை வழிமறித்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.