தேங்காய் உற்பத்தி உள்நாட்டுப் பாவனைக்குப் போதுமானது என்றபோதும், தேங்காய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலேயே உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜயந்த குணதிலக கூறினார். 

தேங்காயின் அண்மைக்கால விலையேற்றம் பற்றிக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நுகர்வில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதாலேயே தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், தேங்காய் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு எடுத்திருக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.