மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவை தோட்டாக்களுடன் கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானையில் கடற்கரைப் பகுதியில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையின் பேரிலேயே அமல் சில்வாவிடம் துப்பாக்கிச் சன்னங்கள் இருந்தமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இரத்மலானையில் உள்ள அமல் சில்வாவின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரிடம் குறித்த சன்னங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டார்.