(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை பங்குதாரராகியுள்ளதன் மூலம்  நாட்டிற்கு எதிரான பெரும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலைமையை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இன்னும் அறியாமல் உள்ளார். 

இதன் வெளிப்பாடுகளே போர் குற்றங்களை மையப்படுத்திய உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பான ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்வைத்துள்ள மாறுப்பட்ட கருத்துகள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.