மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான இராயப்பு யோசப் ஆண்டகை கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ஓய்வுநிலையில் இருந்து வருகின்றார்.

இன்று பிற்பகல் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.