தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையும், பிரதேசவாசிகளையும் குளவிகள் கொட்டியதினால் 16 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையும், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் பெரியோர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கிலக்காகியுள்ளனர். 

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 5 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 11 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆண்களும், 6 பெண்களும், 4 சிறுவர்களும் அடங்குவதாக வைத்தியசாலைத் தவகல்கள் மேலும் தெரிவித்தன.