லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில்  மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.