இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றை மீட்டுச் சென்ற தமிழக மீனவர்கள், வழியில் ஒரு படகு மூழ்கியதால் அதிர்ச்சியடைந்தனர்.

இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் படகுகளை மீட்டுச் செல்ல தமிழக மீனவர் குழுவொன்று வந்திருந்தது.

மொத்தமுள்ள படகுகளில் 38 படகுகளை மட்டுமே மீட்க முடிவுசெய்திருந்த அந்தக் குழு, முதற்கட்டமாக ஏழு படகுகளை இன்று காலை ஏழு மணியளவில் காரைநகரில் இருந்து எடுத்துச் சென்றது.

இராமேஸ்வரம் புறப்பட்டு வந்துகொண்டிருக்கும்போது கடுங்காற்று வீசியதாலும், கடல் சீற்றம் காரணமாகவும் ஒரு படகு கடலில் மூழ்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் எஞ்சிய 6 படகுகளுடன் இராமேஸ்வரம் சென்று சேர்ந்தது.

இதேவேளை, ஊர்காவல்துறையில் உள்ள மேலும் 2  படகுகளை மீட்க  மற்றொரு மீனவர் குழு இன்று இலங்கை வருகிறது.