“உண்மையாகவும், நேர்மையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட விரும்புபவர்களுக்கே நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பேன் ” என கடந்த புதன் கிழமை பன்முகபடுத்தப்பட்ட நிதி மூலம் சனசமூக நிலையங்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அங்கஜன் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அரசியல் ஒரு தொழில் அல்ல, அரசியலை ஒரு தொழிலாக கருதினால் நிச்சயமாக என்னிடத்தில் இடமில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பாண்மையுடன் வருபவர்க்கு நிச்சயமாக நான் இடமளிப்பேன்.

சேவை மனப்பான்மையுடன் பெருமளவான இளைஞர், யுவதிகள் முன் வந்துள்ளனர். புதிதாக இளைஞர், யுவதிகள் குறிப்பாக செயலாற்றும் திறண்களுடைய  இளைஞர்கள் முன் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அத்துடன் கட்சி ரீதியாக நீண்டகாலமாக நேர்மையான வழியில் பயணித்து கொண்டிருப்பவர்கள் என்னுடன் இனைந்து கொள்ளலாம்.

வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, விரும்பியவர்கள் மற்றும் நான் கூறிய தகுதிகள் இருப்பவர்கள் இனைந்து கொள்ளலாம்.

இவ்வாறான இளைஞர்கள் முன் வருகின்ற போது எதிர் காலத்தில் லஞ்சம் அற்ற ஒரு சமூகத்தை நாம் கட்டி எழுப்ப முடியும்” என தெரிவித்தார்.