மும்பை ரயில் நிலையத்தின் நடைமேடைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கையை ரயில்வே அமைச்சு செயற்படுத்தியிருந்தால், நேற்று முன்தினம் அநியாயமாக 22 உயிர்கள் பலியாகியிருக்காது என்று தகவல்கள் எழுந்துள்ளன.

மும்பையில் உள்ள ரயில்வே நிலையங்களில் - எல்பின்ஸ்டன் வீதி ரயில் நிலையம் உட்பட - தரமான நடைமேடைகளை அமைக்க வேண்டும் என, மும்பையின் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரயில்வே அமைச்சிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கோரிக்கை விடுத்திருந்தார். 

இதை ஏற்றுக்கொண்ட அமைச்சு, அதற்கான அறிவித்தலையும் விடுத்திருந்தது. எனினும், அந்த ஒப்புதம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருந்தனவே தவிர செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஒருவேளை சச்சினின் வேண்டுகோளை ஏற்று ரயில்வே அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தால் 22 உயிர்கள் பறிபோயிருக்காது என்று கருத்து எழுந்துள்ளது.