சந்திமால் கைகொடுக்க வலுவான நிலையில் முதல் இன்னிங்ஸை முடித்தது இலங்கை

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 09:41 AM
image

நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு இலங்கை அணி சிறந்த­தொரு இன்­னிங்ஸை ஆடி முடித்­தி­ருக்­கி­றது பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில்.

அண்மைக் கால­மாக பல சறுக்­கல்­களை சந்­தித்து வரும் இலங்கை அணிக்கு பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான தொடர் புதிய நம்­பிக்­கையைத் தரும் என்று எதிர்­பார்க்­கலாம்.

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் அபு­தா­பியில் நடை­பெற்­று­வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது போட்­டியில் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் 155 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொள்ள இலங்கை அணி முதல் இன்­னிங்ஸில் 419 ஓட்­டங்­களைக் குவித்­தது.

இந்தப் போட்­டியில் சந்­திமால், திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் திக்­வெல்ல ஆகி­யோர்தான் அதி­கூ­டிய ஓட்­டங்­களைப் பெற்­றனர். ஆனாலும் ஏனைய வீரர்கள் பெரி­தாக ஓட்­டங்­களைக் குவிக்கா விட்­டாலும் சற்று நிலைத்து நின்று ஆடி மறு­மு­னையில் உள்ள வீரர்­க­ளுக்கு துணை­யாக நின்­றனர். குறிப்­பாக தில்­ருவன் பெரேரா 33 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொண்டார். 

ஆனாலும் 117 பந்­து­களை எதிர்­கொண்டு மறு­மு­னையில் நின்ற சந்­தி­மா­லுக்கு முட்­டுக்­கொ­டுத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் சந்­தி­மாலின் நிதான ஆட்­டத்­தினால் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 227 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

திமுத் கரு­ணா­ரத்ன 205 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 93 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த வேளையில் ரன்­ அவுட் முறையில் ஆட்­ட­மி­ழந்து 7 ஓட்­டங்­களால் சதத்தைத் தவ­ற­விட்டதை அடுத்து திக்­வெல்ல கள­மி­றங்­கி ஆடிக்­கொண்­டி­ருக்க முதல் நாள் ஆட்டம் முடி­வுக்கு வந்­தது.

அதனைத் தொடர்ந்து நேற்­றைய இரண்டாம் நாளில் ஆட்­டத்தை ஆரம்­பித்த திக்­வெல்ல மற்றும் சந்­திமால் ஜோடி சற்று வேக­மாக ஓட்­டங்­களைக் குவிக்க தொடங்­கியது. இதனால் அணியின் ஓட்ட வீதம் அதி­க­ரித்­தது.

பாகிஸ்தான் பந்­து­வீச்­சா­ளர்­களை நேர்த்­தி­யாக எதிர்­கொண்ட திக்­வெல்ல அரைச்சதம் கடந்தார். இந்­நி­லையில் அவர் சதம் கடப்பார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் இன்சைட் எட்ஜ் மூலம் போல்­டாகி 83 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.

இந்த ஜோடியை பிரிக்க முடி­யாமல் திண­றிய பாகிஸ்தான் அணி திக்­வெல்­லவின் விக்கெட் வீழ்ந்த பின்­னர்தான் சற்று நிம்­ம­தி­ய­டைந்­தது. ஆனாலும் அடுத்து வந்த தில்­ருவன் பெரே­ராவும் சளைக்­காது மைதா­னத்தில் நிலைத்து நின்று சந்­தி­மா­லுக்கு முட்­டுக்­கொ­டுத்தார். இதனால் மறு­மு­னையில் நின்ற சந்­திமால் 150 ஓட்­டங்­களைப் பெற்றார்.

இந்­நி­லையில் எதிர்­பா­ராத வித­மாக தில்­ருவன் 33 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவற இலங்கை அணி 419 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

சந்­திமால் இறு­தி­வரை ஆட்­ட­மி­ழக்­காது களத்தில் நின்று 372 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 155 ஓட்­டங்­களைக் குவித்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தானின் அப்பாஸ் மற்றும் யசீர் ஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் விக்கெட்டைப் பறிகொடுக்காது 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35