களமிறங்குகிறார் சங்கா : மஹேலவுக்கும் அழைப்பு

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 12:20 PM
image

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்கால­மாக அடைந்து வரும் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னமும் விளையாட்­டுத்­துறை அமைச்­சரும் பெரும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் பின்­ன­டைவை சந்­தித்­துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியை மீளக்கட்டியெழுப்ப விளையாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர விசேட செய­ல­மர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் எதிர்­வரும் இரண்டு வரு­டங்­களில் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் மேற்­கொள்ள  வேண்­டிய செயற்­றிட்டம் ஒன்றை தயா­ரித்­துள்ளார்.

இந்த புதிய திட்­டத்தின் படி ஐந்து பேர் கொண்ட ஆலோ­சனைக் குழு ஒன்­றையும் அமைச்சர் நிய­மித்­துள்ளார்.

அதில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்­பவான் குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகி­யோரின் பெயரை பரிந்­து­ரைத்­துள்ளார். அத்­தோடு அர­விந்த டி சில்­வாவும் அதில் இணைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்தக் குழுவில் குமார் சங்­கக்­கார இணைந்­து­கொள்­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்ற நிலையில் மஹே­ல­வுக்கும் அமைச்சர் இதில் இணைந்து­கொள்­ளு­மாறு அழைப்பு விடுத்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முதல் தர போட்­டி­களில் விளை­யாடி வந்த குமார் சங்­கக்­கார அதி­லி­ருந்தும் தற்­போது ஓய்­வு­பெற்­றுள்ள நிலையில் தொழில்­முறை இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் மட்டும் விளை­யா­டுவேன் என அறி­வித்­துள்ளார்.

கிரிக்கெட் குறித்த ஞானமும் அதன் செயல்­முறை பற்­றிய சிறந்த அனு­ப­வமும் கொண்­டுள்ள சங்­கக்­கார இலங்கைக் கிரிக்கெட் அணியைக் கட்­டி­யெ­ழுப்பும் செயற்­றிட்­டத்தில் இணைந்து கொண்டால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58