சர்வதேச சக்திகளின் தேவைக்கேற்ப புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கினாலும் செயற்பாட்டு ரீதியில் தோல்வியடைந்து விடும். இதற்கு இந்தியா வலுக்கட்டாயமாக இலங்கையின் அரசியல் சாசனத்தில் திணித்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்த உதாரணமாகும். அதில் காணப்படும் பொலிஸ் உட்பட முக்கிய அதிகாரங்கள் எதுவும் நடைமுறைக்கு கொண்டுவர முடியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொடுக்கல் வாங்கலாக அல்ல இணக்கப்பாட்டு ரீதியிலேயே தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்ட அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். சர்வதேசத்தில் வலுவான நிலையில் உள்ள புலி ஆதரவுக்குழுக்களின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரி இணையத்தளத்திற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் வழங்கிய செவ்வியின் வடிவம் வருமாறு…

கேள்வி : அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன ?

பதில் : அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் மூலச்சட்டமாகும். அதனை உருவாக்குவதற்கே தற்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. அதற்கு ஒரு பொறிமுறை காணப்படுகின்றது. தற்போதைய அரசியலமைப்பில் 12 ஆவது அதிகாரத்தில் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பொறிமுறை மிக தெளிவாக கூறப்பட்டடுள்ளது. இதற்கு முரணாக சென்றால் அது சட்டவிரோதமானதாகவும்  அரசியலமைப்பிற்கு முரணானதாகவுமே கருதப்படும்.ஆகவே பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக பாராளுமன்றத்திற்குள்ளேயே செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.வேறு நிறுவனங்கள் அவசியம் இல்லை. அரசியலமைப்பு சபை என்பது எமது சட்டத்திலோ அரசியலமைப்பிலோ  காணப்படும் விடயமல்ல. ஆகவே அரசியலமைப்பு வரைபிற்குள் அந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே நாங்கள் கூறுகின்றோம்.

கேள்வி : அரசாங்கம் உரிய வழிமுறைகளை மீறி புதிய அரசியலமைப்பு விடயத்தில் செயற்படுகின்றதாகவா நீங்கள் குற்றம் சுமத்துகின்றீர்கள் ?

பதில் : ஆம். ஜனவரி 9 ஆம் திகதி பிரதமர் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தொடர்பில் சமர்பித்த யோசனையில் அரசியலமைப்பு சபை என்ற ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவ்வாறானதொரு விடயம் எமது சட்டத்தில் இல்லை. அதற்கான தேவை என்ன? தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன உருவாக்கியது அரசியலமைப்பு சபை ஊடாக அல்ல. பாராளுமன்றத்தின் ஊடாகவே தயாரித்தார். ஆகவே ஏன் சட்டத்தில் குறிப்பிடப்படாத சட்ட அங்கிகாரமற்ற சபையின் ஊடாக அரசியலமைப்பு என்ற ஒரு முக்கியமான விடயத்தை செய்ய முற்பட வேண்டும். ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் அரசியலமைப்பு சபை காணப்பட்டது. கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா , 1972 அரசியலமைப்பை தயாரிப்பின்போது  விசேட காரணம் காணப்பட்டமையினால் அவ்வாறானதொரு தேவை இருந்தது. பிரித்தானியாவின் ஆதிக்கம் இலங்கை அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட்டிருந்தமையினால் அதனை முழுமையாக இரத்து செய்து புதிய அரசியலமைப்பு பிரவேசத்திற்கு அவர்  முற்பட்டார். ஆனால் அவ்வாறானதொரு தேவை தற்போது இல்லை. மிகவும் எளிமையான முறையில் அரசியலமைப்பில் நிலையியல் கட்டளைகளை உருவாக்குவது போன்று  செயறற்பட வேண்டும். 

கேள்வி : இந்த விடயத்தில் பொதுவானதொரு சந்தேகம் உள்ளது. அதாவது இது புதிய அரசியலமைப்பா ? அல்லது சமகால அரசியலமைப்பின் திருத்தமா ?

பதில் : இதில் பாரிய சந்தேகம் உள்ளது.  நீங்கள் கூறியது போன்று அரசாங்கத்தின் அரசியலமைப்பு விடயத்தில் எமக்கு பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றது. இந்த சந்தேகங்களுக்கு பிரதான காரணம் தான் அரசாங்கத்திற்குள் பல முரணான கருத்துக்கள் காணப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள  விடயம் என்ன ? அதாவது மக்கள் கருத்து கணிப்பின்றி மேற்கொள்ள கூடிய திருத்தங்களையே அரசியலமைப்பில் செய்யவுள்ளதாக அவர் தெளிவாக ஜனவரி 8 தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவிற்கு அப்பால் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியமாயின் தான் அவ்வாறான திருத்தங்களை செய்வதில்லை என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஜனவரி 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.தேசிய அளவில் மக்கள் ஆணை வேறு யாருக்கும் கிடைக்க வில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே கிடைத்துள்ளது. அவரது கொள்கை பிரகடணத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் செல்ல ஆணை கிடைக்கவில்லை என சுசில் பிரேம ஜயந்த தெளிவாக கூறினார். இதுவே ஜனாதிபதியின் நிலைப்பாடு. ஆனால் இதற்கு முற்றாக மாறுப்பட்ட கருத்தினையே பிரதமர் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றார். அவரது யோசனையில் 24 பக்கத்தில் தெளிவாக  இந்த அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து விட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.  இதுவே தமது நோக்கம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது யோசனையில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானனது. இவ்வாறான முக்கியமான விடயங்களை நாட்டில் முன்னெடுக்கும் போது எதிர்காலத்திற்கு நேரடியாக தாக்கம் செலுத்தக் கூடிய விடயம் என்பதால் அதனை தயாரிப்பவர்களின் சிந்தனைகளில் தெளிவு தன்மை காணப்பட வேண்டும். முரண்பட்டு செய்ய முடியாது. ஆகவே நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் முதலில் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறானதொரு நிலை காணப்படாமையினால் தான் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கேள்வி : அரசாங்கத்தில் இரண்டு நிலைப்பாடுகள் என கூறுகின்றீர்கள், ஆனால் வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டு  சமஷ்டி முறைமைக்கு சென்று நாட்டை பிளவுபடுத்துவதாகவும் கூறுகின்றீர்கள் இதனூடாக நீங்கள் கூறவருவது என்ன ?

பதில் : அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை இன்னும் யாரும் காணவில்லை. ஆனால் இந்த விடயங்கள் குறிப்பிட்டளவு இடம்பெற்றுள்ளதாக நாங்கள் நம்புகின்றோம். எனவே விவாதம் ஏன் காணப்படுகின்றது என்றால் , சட்டத்திற்கு அப்பால் சென்று இவ்வாறு அரசியலமைப்பு விடயத்தில் செயற்படுவதற்கான காரணம் என்ன ? சந்தேகம் உள்ளது. இதுவே உண்மை. வேறு பிரச்சினைகளை மறைப்பதற்காக முன்வைக்கப்படும் திட்டமா ? என்ற சந்தேகம் உள்ளது. அனைவருக்கும் தெரியும் இன்று நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினை காணப்படுகின்றது. இந்த மாற்றத்திற்காக செயற்பட்ட யார் இன்று திருப்தியடைந்துள்ளனர். மாணவர்கள் தொடக்கம் வர்த்தகர்கள் என அனைத்து தரப்புமே வேதனையுடனேயே உள்ளனர். இன்று வரவு செலவு திட்டம் என்று ஒன்றில்லை. அரசாங்கத்தின் வருமானத்திற்கான வழிகள் மூடப்பட்டுள்ளது. 

கேள்வி : பாரிய  சந்தேகம் உள்ளதாக கூறீனீர்கள் . அந்த சந்தேகத்திற்கான காரணம் என்ன ?

பதில் : ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் பல உறுதிமொழிகளை வழங்கியது. அவற்றை நிறைவேற்றுமாறு விN~டமாக மேற்குலக நாடுகள் , டயஸ்போரா , தமிழ்  தேசிய கூட்டமைப்பு ஆகியன அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதை நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். ஆகவே உறுதிமொழி பெற்றவர்கள் தற்போது அழுத்தம்  கொடுக்கின்றனர். கடந்த வாரத்தில் எமது நாட்டிற்கு வந்த பிரித்தானிய வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயார் , தெளிவாக ஒரு விடயத்தை கூறினார் . அதாவது அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் குசைன் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார். அவர் எம்மோடு சம்பாசனையில் ஈடுப்பட்டு தேனீர் அருந்தி விட்டு செல்வதற்காக அவர் இங்கு வரவில்லை. ஜெனீவாவில் வழங்கிய உறுதிமொழிகள் எந்தளவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்காகவே மனித உரிமைகள் ஆணையாளர் வருகின்றார் . ஆகவே காலம் கடத்தாது உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு பாரிய அழுத்தம் காணப்படுகின்றது. இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் முற்படுகையில் நாட்டில் பாரிய எதிர்ப்பு அலை மேலெழுந்தது. அதனை கட்டுப்படுத்தவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினருக்கு கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படுவதும் இல்லை. பாராளுமன்றத்திற்கு வெளியில் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்புகள் மிகவும் மோசமான முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன.  ஆகவே அரசாங்கத்தின் தெளிவற்ற ஒரு நிலைப்பாடு பாரிய சந்தேகங்களுடன் அரசியலமைப்பு என்று தற்போது மேடைக்கு வந்துள்ளது. அதன் உள்நோக்கம் தீ சுவாலையாக எரியும் பிரச்சனைகளை மூடிமறைத்து மக்களின் அவதானத்தை திசை திருப்புவதாகும்.

கேள்வி : மேற்குலக நாடுகளின் தேவைக்காக புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தயாரிக்கின்றது என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்.

பதில் : ஆம் , கொஞ்சம் நாம் உண்மையை பேசுவோம். இன்று எமது நாட்டை யார் ஆளுகின்றனர். மேற்குலக சக்திகள் இன்று எமது நாட்டை ஆளுகின்றனர். ஒவ்வொரு வாரமும் பிரித்தானயா மற்றும் அமெரிக்காவில் இருந்து பிரதிநிதிகள் இலங்கை வருகின்றனர். காலனித்துவ ஆட்சியில் கூட இந்தளவு யாரும் வரவில்லை. அமெரக்க இராஜாங்க தினைக்களத்தில்  இருந்து இலங்கைக்கு வருகை தராதவர் யார் ? ஜோன்  கெரியில் ஆரம்பித்தால் நீஷே பிஷ்வால் மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்தார். சமந்தா பவர் , தோமஸ் ஷேனன்  ஆகியோரும் வந்தனர். இலங்கை சிறிய நாடு என்றாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு  போன்ற விடயங்களுக்கு இலங்கையின் அமைவிடம் முக்கியமானது என அவர்கள் எவ்விதமான தயக்கமும் இன்றி இவர் கூறுகின்றனர். அதே போன்று அமெரிக்காவின் பிரதி பாதுகாப்பு செயலாளர் இலங்கைக்கு வந்தார். அவர் நேரடியாக  இராணுவத்துடன் செயற்படுகின்றார். பிரித்தானியாவின் வெளியுறவு இராஜாங்க அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது 6.6 ஸ்ரேலிங் பவுன் வழங்கப்பட்டது. இலங்கையின் இராணுவத்தை மறுசீரமைக்கவே இந்த தொகை வழங்கப்பட்டது. உலகில் எந்த நாடு இவ்வாறு நிதி பெற்றுக் கொள்ளும் .  தமது இராணுவத்தை கொண்டு நடத்துவது நிர்வகிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை வேறு ஒரு தரப்பிற்கு ஒப்படைக்க முடியாது. இங்கு இராணுவத்தை வெளிநாடொன்றுக்கு கையளிப்பது மாத்திரம் அல்ல , இதனை கண்காணிப்பதற்காக புது டில்லியில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தாணிகராலயத்தில் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார். இது பாரிய அழுத்தமாகும்.வேறு நாடுகளுடன் பேச வேண்டாம் என நாங்கள் கூறவில்லை. ஆனால் இந்தளவு எமதுநாடு தொடர்பான தீர்மானங்களை இராணுவம் தொடர்பான தீர்மானங்களை வெளிநாட்டிற்கு வழங்கிய சந்தர்ப்பத்தை நாம் காணவில்லை . நல்லாட்சி அரசாங்கததிற்கு மக்கள் ஆணை வழங்கியது வேறு நாடுகள் எம்மை ஆள்வதற்காகவா .

கேள்வி : தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் புதிய அரசியலமைப்பு ஊடாக அரசாங்கம் ஒரு படி  முன்சென்றுள்ளதாக பலரும் கூறுகின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு காணுகின்றீர்கள். ?

பதில் : என்ன வேலைத்திட்டம் ? அவ்வாறு ஒன்று எமக்கு தெரியாது. அரசாங்கம் தெளிவாக அதனை கூறவில்லை. அரசியல் தீர்வு விடயத்தில்  என்ன செய்யப்போகின்றோம்.? 13 ஆவது அரசியலமைப்பிற்கு அப்பால் செல்வதா ? எவ்வகையான அதிகாரங்களை கூடுதலாக வழங்குவது ? அதே போன்று எமது இராணுவத்திற்கு எதிராக குற்றங்களை சுமத்தப்பட்டுள்ளது. பாரிய போர் குற்றங்களை இலங்கை இராணுவம் செய்தமைக்கான நம்பனகமான ஆதாரங்கள்  காணப்படுவதாக ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை யார் கூறுவது நாம். ஏனெனில் இது அமெரிக்காவின் தீர்மானம் அல்ல. எமது தீர்மானமாக அமெரிக்க தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஜனாதிபதி மைதிரிபால சிறசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அதனை தமது தீர்மானமாக ஏற்றுக் கொண்டுள்ளது. போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக  விN~ட நீதிமன்றம் நிருவுவதாக ஜெனீவாவில் உறுதயளிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளின் நீதியரசர்கள் , விpசாரணையாளர்கள் போன்றவர்களை ஏற்றுக் கொள்வதாகவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு செய்வது ? பொறிமுறை என்ன ? இவற்றை செய்வதற்கு காலம் கடத்த வேண்டாம் என்று பிரித்தானிய அமைச்சர் இங்கு வந்து கூறியபோது இல்லை இன்னும் ஒரு மாத்தில் செய்கின்றோம் என்கின்றனர். எதுவுமே தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. மறைத்து செய்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் .அந்நாட்டு போக்குவரத்து அiமைச்சர் பாராளுமன்த்தில் தெளிவாக கூறுகின்றார் பாலம் அமைக்க அனைத்தும் சரி ஆசிய வங்கயில் கடன் கிடைத்தவுடன் பணிகளை ஆரம்பிப்போம் என   , ஆனால் இலங்கை அரசாங்கம் அனை மறுக்க கூட இல்லை. ஏன் அரசாங்கம் மக்கள் மத்தியில் வெளிப்படையாக செயற்படுவதில்லை. 

கேள்வி : யுத்தத்தின் பின்னர் அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைக்கு தற்போது காணப்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் நீங்கள் இருந்தீர்கள் .ஆனால் காலாகாலமாக தமிழர்களுக்கான தீர்வு வெறும் பேச்சு வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தபடுகின்றது. ஆகவே இது ஏற்புடைய விடயமாக நீங்கள் கருதுகின்றீர்களா  ?

பதில் :   நியாயமான தீர்விற்கு யாரும் எதிராக நிற்கப்போவதில்லை.அனைவரினதும் இணக்கப்பாட்டை பெற்று நியாயமான தீர்வை வழங்க வேண்டும்.சில விடயங்களை இன்று வரையில் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு இணக்கப்பாடின்மையே காரணமாகியுள்ளது. இவ்வாறனதொரு சூழ்நிலையில் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக , உதாரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு பாரியளவில் ஆதரவாக செயற்பட்டது. இதற்கு மாற்றீடாக அரசியலமைப்போ தீர்வோ அமைந்து விட கூடாது.ஆகவே அனைவருடனும் கலந்துரையாடி பொதுவான தீர்வு திட்டத்திற்கு தான் செல்ல வேண்டும். 

கேள்வி : தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் உங்களது கருத்து தெளிவற்றதாக காணப்படுகின்றது. நியாயமான தீர்வு என்று கூறுகின்றீர்கள் , அதனை எவ்வாறு அளவிடுகின்றீர்கள்.?

பதில் : அதனை என்னாள் கூற இயலாது. ஏனெனில் நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.அரசாங்கம் தீர்வு திட்டம் தொடர்பில் யோசணைகளை முன்வைக்க வேண்டும். கடந்த காலங்களில் பவ்வேறு விடயங்களை நாம் கற்றுக்கொண்டோம். பல கொடுக்கல் வாங்கல்களுக்கு சென்று கற்றுக் கொண்டோம். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் எமது விருப்பத்தின் பேரில் இடம்பெற்றதொன்றல்ல . ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.அப்போதைய இந்திய பிரதமரான ரஜீவ் காந்தி தமது இராணுவத்தை வெறுமனே அனுப்ப இயலாது. அரசியல் விடயங்கள் சிலவற்றுக்கு இணக்கப்பாடுகள் அவசியம் என தெரிவித்திருந்தார். இதன் பிரகாரம் தான் 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஜே;ஆர் ஜயவர்தனவிற்கு சில விடயங்ளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகியது. இவ்வாறு தான் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாகியது. ஆனால் அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் சில அன்றிலிருந்து இன்று வரை செயற்படுத்த முடியாமல் போனது. உதாரணமாக பொலிஸ் அதிகாரம் இன்று வழங்கப்பட வில்லை. 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் ஐந்து ஜனாதிபதிகள் நாட்டை ஆண்டனர். அதிகாரங்களை வழங்க யாராலும் முடியாமல் போனது. இதற்கு காரணம் என மக்கள் ? மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள வில்லை .ஆகவே அழுத்தங்களுக்கு அடிபணிந்து தீர்வு திட்டத்தை முன்வைத்தால் அதனை உள்நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலையே உருவாகும்.

கேள்வி :சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் நீங்கள் ஒரு தீர்வு பொதியை முன்வைத்தீர்கள் . அதில் சமஷ்டி என்ற சொல் நீக்கப்பட்டு யூனியன் ஒப் ரீஜன் என குறிப்பிட்டிருந்தீர்கள். இதில் இரண்டிலும் உள்ள வேறுப்பாடு என்ன?

 பதில் : அப்போது வேறு மாதிரியான அரசியல் சூழலே காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் போர் உச்ச கட்டத்தில் காணப்பட்டது. விடுதலை புலிகள் இயக்கத்தை உலகின் ஆபத்தான இயக்கமாக அமெரிக்காவின் எப்.பி.ஐ பிரிவு குறிப்பிட்டது. இதனை நாங்கள் கூற வில்லை. அன்று இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அப்போது தான் இவ்வாறான யோசணைகளை முன்வைத்து விடுதலை புலிகளுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது. 5 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. 2002 ஆம் ஆண்டிற்கும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதிற்கும் இடைப்பட்ட காலப்பகுதிலேயே இந்த பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது.ஆனால் இந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தது. இதற்கு காரணம் விடுதலை புலிகள் இயக்கம் தெளிவான நிலைப்பாட்டிற்கு வராiமையினாலேயே இந்த தேர்விகளுக்கு காரணம். காலம் கடத்தும் கொள்கையையே அவர்கள் பின்பற்றினார்கள்.இலங்கை அரசாங்கம் பிரச்சணைளை தீர்ப்பதற்கு ஆர்வத்துடன் செயற்படுகின்ற போதிலும் விடுதலை புலிகள் பிடிவாதமாக செயற்படுகின்றமையை சர்வதேச சமூகம் அவதாணித்தது. 2003 ஆம் ஆண்டில் ஜப்பான் டோக்கியோ நகரில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டிற்கு விடுதலை புலிகள் சமூகமளிக்க வில்லை. விடுதலை புலிகளின் கடும் போக்கை   சர்வதேச சமூகம் புரிந்துக் கொண்டது. இவ்வாறு நெருக்கடிக்கு மத்தியில் முன்வைக்கப்பட்ட விடயம் தான் நீங்கள் கூறிய தீர்வு பொதி. இதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனாலும் புலிகளை தோல்வியடைய செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பிற்கு இது பாத்திரமானது. ஆனால் அன்றைய சூழலுக்கும் இன்றும் பாரிய வேறுப்பர்டுகள் காணப்படுகின்றது. அடிக்கடி இந்த விடயத்தை தர்க்க ரீதியாக முன்வைத்தாலும் அதில் செல்லுப்படியற்ற தன்மை இல்லை . புலிகள் ஆயு ரீதியாக போரில் தோல்வியடைந்துள்ளனர். ஆனால் ஆபத்து இல்லை என கூற முடியாது. இன்று சர்வதேசத்தில் புலிகளின் ஆதராவாளர்கள் மிகவும் தீவிரமாக செயற்படுகின்றனர். அவர்களுக்கு தமிழீழம் தேவை. அதனை தவிர்ந்த ஒன்றை அவர்கள் விரும்புவதில்லை. இந்த வருடம் கனடாவில் இடம்பெற்ற மாவீரர் தினத்தை நாங்கள் பார்த்தோம். புலிகளின் கொடி ஏற்றப்பட்டது. அந்த புலிகளின் அமைப்பு பிரதமர் ஒருவரை நியமித்துள்ளது. ருத்திரகுமார்.அவர் நிபுணர் குழு ஒன்றை அமைத்து இலங்கையில் ஸ்தாபிக்கப்பட உள்ள போர் குற்ற விசாரணைகளுக்கான நீதி மன்றின் முன்னேற்றங்களை ஆராய்வதற்கு. ஆகவே ஈழ கனவை அவர்கள் இன்னும் மறக்க வில்லை என்பது வெளிப்படுகின்றது. இதனை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் மூலச்சட்டம் அமையப்பெற வேண்டும். ஆனால் அன்றைய நிலை அவ்வாறு இல்லை. நியாயமான தீர்விற்காக பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தோம். இதற்கு புலிகள் ஒத்துழைக்காமையினால் அவர்களை அழிக்க சர்வதேசம் எமக்கு உதவியது. ஆகNவு இன்றைய நிலையை அவதானத்தில் கொண்டு தீர்வுகளுக்கு செல்ல வேண்டும்.

கேள்வி : புதிய அரசியலமைப்பிற்கு எதிராக நீங்கள் எவ்வாறு செயற்பட போகின்றீர்கள்.?

பதில் : இதற்கு நாங்கள் மாத்திரம் எதிர்ப்பை வெளிப்படுத்த  வில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.மிகவும் எளிமையான மூன்று திருத்த யோசணைகளை முன்வைத்தனர். ஜனவரி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதனை முன்வைத்தனர். ஜனவரி 12 ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்கள் இதனை ஏற்றுக் கொண்டு கைச்சாத்திட்டு சமர்பித்தனர். சுசில் பிரேமஜயந்த , எஸ்.பி.திசாநாயக்க , டிலான் பெரேரா அநுர யாபா என அனவரும் கைச்சாத்திட்டனர். திருத்தப்பட வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியும் இந்த விடயத்தில் திருப்தியான நிலைப்பாட்டடில் இல்லை.எதிர்வரும் செவ்வாய் கிழமை பாராளுமன்றம் கூட உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் இந்த விடயத்தில் திருப்தியான நிலைப்பாட்டடில் இல்லை.எதிர்வரும் செவ்வாய் கிழமை பாராளுமன்றம் கூட உள்ளது. ஆனால் பிரதமரின் அரசியலமைப்பு தொடர்பான யோசனை பாராளுமன்ற நிரலில் ஒருநாள் கூட உள்ளடக்கப்பட வில்லை.கட்சி தலைவர் கடந்த 19 ஆம் திகதி கூடினார்கள்.அப்போது கூட பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளடக்குவது தொடர்பில் தீர்மானிக்க வில்லை. ஆகவே தன்னிச்சையாக கடும் போக்குடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது சாத்தியப்படாது. 

(லியோ நிரோஷ தர்ஷன்)