நாட்டில் காணப்­படும் கடன்­ சுமையின் கார­ண­ மாக அடுத்த இரு ஆண்டுகள் எமக்கு பெரும் சவால்­மிக்­க­தாக இருக்கும். எனினும் அடுத்த வரு­டங்­களில் அதி­க­ள­வி­லான முத­லீ­டு­களை இலங்­கைக்கு கொண்டு வருவோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­தெ­ரி­வித்தார்.

 அத்­துடன் இலங்­கையின் கல்வி கொள்­கையில் இரு பிர­தான கட்­சி­களும் வெவ்­வேறு கொள்­கை­களை கடைப்­பி­டித்து வந்­தன. எனினும் தற்­போது ஒரு கொள்­கையின் கீழ் கல்­வியை முன்­னேற்­ற­வுள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கல்­வி­து­றையில் பாரிய புரட்­சியை ஏற்­ப­டுத்தும் வகையில் கோட்டை மகாவித்­தி­யா­ல­யத்தில்  ஸ்மார்ட் வகுப்பு அறை நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் திறந்து வைக்­கப்­பட்­டது. 

இந்­நி­கழ்வில்  கல்விஅமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், தேசிய கொள்கை மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கலந்து கொண்­டனர்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

கல்வி துறையில் பாரிய புரட்­சியை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். இதன்­படி ஸ்மார்ட் வகுப்பு அறையை திறந்து வைத்தோம். இது போன்று நாட­ளா­விய  ரீதியில் அனைத்து பாட­சா­லை­க­ளிலும் ஸ்மார்ட் வகுப்­பறை திட்­டத்தை கொண்டு செல்­ல­வுள்ளோம். மேலும் அனைத்து பாட­சா­லை­க­ளையும் வை பை வல­ய­மாக மாற்­றி­ய­மைக்­க­வுள்ளோம்.  13 வருட கட்­டாய கல்­வியை வழங்­க­வுள்ளோம்.

ஸ்மார்ட் வகுப்­புக்­காக ஆசி­ரி­யர்­க­ளுக்கு பயிற்­சி­களை வழங்­க­வுள்ளோம். அத்­துடன் தற்­போது கல்வி துறையில் ஒரு கொள்­கையே கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. முன்­னைய காலங்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்கு வரும் போது ஒரு கொள்­கையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆட்­சிக்கு வரும் போது வேறொரு கொள்­கையும் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது அந்த பிரச்­சினை இல்லை. இருந்­த­போ­திலும் நாம் ஆட்­சிக்கு வந்த போது நிதி போது­மா­ன­தாக இல்லை. கடன் சுமை அதி­க­ளவில் காணப்­பட்­டது. 

தற்­போது கடனை செலுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். எப்­ப­டியும் 2020 ஆம் ஆண்­ட­ளவில் கடன் சுமையை குறைத்­துக்­கொள்ள முடியும். எனினும் நடப்­பாண்டில் நாம் பல்­வேறு சவால்­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்தோம். ஆனால் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு வழி­வ­குத்­துள்ளோம்.

இந்­நி­லையில் அடுத்து இரு வரு­டங்­க­ளுக்கும் எமக்கு பல்­வேறு சவால்­களை எதிர்க்­கொள்ள நேரிடும். எனினும் அதற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

இந்த சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் அதே நேரம் கல்வி மற்றும் சுகா­தார துறையை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்போம்.

தற்­போது நாம் 4இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யுள்ளோம். 2 இலட்சம் வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு உதவி செய்­துள்ளோம். கர்ப்­பினி தாய்­மார்­க­ளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்­ப­னவு வழங்­கி­யுள்ளோம். குற்ற செயல்­களை 30 வீத­மாக குறைத்துள்ளோம். ஆகவே நாட்டு மக்களின் உதவி எமக்கு பெரும் அவசியமாகும். அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகளவிலான முதலீடுகளை நாம் நாட்டுக்கு கொண்டு வருவோம். இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்குகொண்டு  செல்ல முடியும் என்றார்.