குற்றவியல் நீதிமன்றுக்கு நான் செல்லமாட்டேன் : சரத் பொன்­சேகா

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 09:51 AM
image

யுத்தக் குற்ற விசா­ர­ணைகள் என்ற பெயரில் சர்­வ­தேச நீதி­மன்றில் நிற்க நான் ஒரு­போதும் தயா­ரில்லை. சர்­வ­தே­சத்­திற்கு பதில் கூற விரும்­ப­வு­மில்லை, எனது கட்­ட­ளைக்­கேற்ப யுத்தம் செய்த எவ­ரையும் தண்­டிக்க இட­ம­ளிக்க மாட்டேன் என பீல்ட்­மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். 

இரா­ணு­வத்தில் உள்ள பிர­தான நிலை குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். 

கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில்  நேற்று முன்­தினம்  இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

 இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

பெளத்த தேரர்­களை விமர்­சிப்­ப­தாக சிலர் எம்­மீது குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். பெளத்த தேரர்­க­ளுக்கு நாம் உய­ரிய மரி­யா­தை­களை வழங்கி வரு­கின்றோம்.  அவர்­களை ஒரு­போதும் நாம் அவ­ம­திக்­க­வில்லை. மாநா­யக்க தேரர்­களை ஒவ்­வொரு நாளும்  வணங்கி வரு­கின்றோம். ஆனால் ஒரு­சில பெளத்த தேரர்கள் எம்மை விமர்­சித்து சில தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்­தனர். நாம் இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்க முயற்­சி­களை எடுப்­ப­தாக கூறி­னார்கள். அவர்கள் அர­சியல் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தனர். அவர்கள் அர­சியல் விமர்­ச­னங்­களை முன்­வைத்து அதற்கு நாமும் அர­சியல் கருத்­துக்­களை தெரி­விக்கும் போது அதனை தவ­றாக விமர்­சிப்­பது ஏற்­று­கொள்ள முடி­யாத விட­ய­மாகும். இந்த நாட்­டினை பாது­காக்க வேண்டும் என்ற உணர்வு எம்­மத்­தி­யிலும் உள்­ளது. நாம் கூறும் கருத்­துக்­களை தவ­றாக அர்த்­த­ப்ப­டுத்தி மீண்டும் மோச­மான அணியை உரு­வாக்க சில தேரர்கள் முயற்­சித்து வரு­கின்­றனர். 

மேலும் யுத்த குற்­றங்கள் தொடர்பில் நான் முன்­வைத்த கருத்­து­க­ளினால் பிரச்­சி­னைகள் எழ­வில்லை. யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து இந்த பிரச்­சி­னைகள் எமக்கு எதி­ராக எழுந்­துள்­ளன. இலங்­கையில்  பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு யுத்த குற்றம் தொடர்­பி­லான அறிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அறிக்­கையின் தக­வல்­களை   கொண்டே எமக்கு எதி­ராக அழுத்­தங்கள் எழுந்­துள்­ளன. இதில் முழு­மை­யாக இரா­ணுவ வீரர்­களை எவரும் குற்றம் கூற­வில்லை. இரா­ணு­வத்தில் இருந்த பிர­தான சிலர் மீதே இந்த குற்­றங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதன் உண்மைத் தன்­மையை விசா­ர­ணை­களின் மூல­மாக ஆராய்­வது தவ­றல்ல . 

யுத்­தத்தை நடத்­திய  இரா­ணுவ தள­பதி என்ற அடிப்­ப­டையில் எமது இரா­ணு­வத்தில்  குற்­ற­வா­ளிகள்  இருந்தால் அவர்­களை பாது­காக்க நான் முன்­வ­ர­மாட்டேன். அர­சாங்கம் என்ற வகையில் இது அனைத்து தலை­வர்­க­ளையும் பாதிக்கும். நான் ஒரு­போதும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் முன்னாள் சென்று நிற்­கப்­போ­வ­தில்லை. பதில் கூறப்­போ­வ­து­மில்லை. எனது கட்­ட­ளையின் கீழ் செயற்­பட்ட எவ­ரையும் நீதிமன்றத்தில்   நிறுத்த நான் தயார் இல்லை. விரும்பவும் இல்லை. அதேபோல் இராணுவத்தில் ஒரு சிலர் குற்றவாளிகளாக இருந்தால் அவர்களுக்கு எதிராக  இந்த நாட்டின் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56