மியன்மார் அகதிகள் : பூஸா முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தடை

30 Sep, 2017 | 08:54 AM
image

மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா முகாமை அண்டியுள்ள பகுதிகளில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக காலி நீதிவான் நீதிமன்றம் தடை  உத்தரவை பிறப்பித்துள்ளது.

மியன்மாரில் இருந்து கடல்மார்க்கமாக வந்த 30 மியன்மார் அகதிகள் நீதிமன்ற உத்தரவின் படி தெஹிவளைபகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தங்கவைக்கபட்டடிருந்த மியன்மார் அகதிகளின் வீட்டின் முன்னாள் கடந்த 26 ஆம் திகதி பிக்குகள் அடங்கிய குழுவினர் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

இதையடுத்து, குறித்த 30 மியன்மார் அகதிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி பூஸா தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மியன்மார் அகதிகள் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா தடுப்பு முகாமைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் எவ்வித ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவதற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை, தெஹிவளைப் பகுதியில்  மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னாள் கலகம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38