நாவலப்பிட்டி மற்றும் பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியான கொலப்பத்தனை தோட்ட பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இன்று மதியம் 12 மணியளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் குயின்ஸ்பெரி தோட்டத்தில் வசிப்பதாகவும், காத்தான் கறுப்பாயி வயது 58 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இன்று காலை வீட்டுத் தேவைக்கா விறகு தேடுவதற்காக சென்ற இப்பெண்ணே நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியின் ஓரத்தில் உள்ள தேயிலை நடப்பட்ட இடத்திலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

சம்ப இடத்திற்கு விரைந்த இரு பிரிவு பொலிஸாரும் சடலத்தை மீட்டுள்ளனர்.

 

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக நாவலப்பிட்டி மற்றும் பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.