அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்  இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா படல்கல சந்தியில் இன்று மதியம் 11.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

சாஞ்சிமலையிலிருந்து அட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸும் போடைஸ் பகுதியிலிருந்து சாஞ்சிமலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டுள்ளன.  

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.