கொழும்பு - புத்தளம் வீதியில் முந்தலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பஸ் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 18 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம, ராஜங்கனய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயடைந்தவர்களில் நால்வரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தலம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.