இன்றைய திகதியில் பெண்கள் தான் அதிகளவில் முதுகு வலியால் தவிக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால் முதுகு வலிக்கு கோர் தசைகள் எனப்படும் தசைகள் வலுவிழப்பதால் தான் வலிகளுக்கு காரணம் என்கிறார்கள் இயன் முறை மருத்துவ நிபுணர்கள்.

எம்முடைய உடலில் நான்கு வகையாக பிரிக்கப்பட்டிருக்கும் கோர் தசைகளை இயன் முறை மருத்துவ பயிற்சி மூலம் வலுவாக்கினால் வலிகள் சிறிது நேரத்தில் மறைந்துவிடும். அத்துடன் சக்தி கூடிய நிலையிலும் காணப்படுவீர்கள்.

உடனே எம்மில் பலரும் கோர் தசைகளா..! அவை எங்கேயிருக்கின்றன என்று சந்தேகம் கேட்பீர். எம்முடைய வயிற்றுப் பகுதி தசைகள், கீழ்ப் பகுதியில் உள்ள தசைகள், உதரவிதானப்பகுதியிலுள்ள தசைகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுடன் தொடர்புள்ள சில தசைகள் ஆகியவை சேர்ந்தது தான் கோர் தசைகள்.

பெண்கள் இத்தகைய கோர் தசைகளின் வலிமையை எளிதில் இழந்துவிடுகிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், திருமணத்திற்கு பின்னர் கருவுற்றிருக்கும் தருணத்தில் கிட்டத்தட்ட 9 மாதக்கால அளவிற்கு குழந்தையை தாங்கிக் கொண்டேயிருக்கும் வயிற்றுப் பகுதி தசைகள், பிரசவத்திற்கு பின்னர், தன்னுடைய இயல்பான நீட்சித்தன்மையை இழந்துவிடுகின்றன. இந்த நான்கு தசைகளும் வலுவிழப்பதால் தான் முதுகு வலிகள் ஏற்படுகின்றன. இதற்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியை முறையாகவும், தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தால் முதுகு வலியும் குறையும். தசைகளும் வலுவடையும்.

டொக்டர் செந்தில்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்