மலையத்தில் உள்ள பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்த கைச்சாத்திடல் நேற்று கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றதாக ராஜாங்க கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

இந்த ஓப்பந்தம் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித்சந்துக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் இராதாகிருஸ்ணன் திவாகரன் உதவி இந்திய உயர் ஸ்தானிகர் கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டட அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர பிரதான கணக்காளர் ஜயசேகர ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருந்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், இந்த பாடசாலை ஒரு மாகாண பாடசாலையாகும். 

இதற்கான அபிவிருத்திகள் அனைத்தும் மாகாண சபையின் ஊடாக நடைமுறைபடுத்த வேண்டும். 

இந்த நிலையில் இந்த பாடசாலைக்கு இந்திய உதவியின் மூலம் 95 மில்லியன் ரூபா நிதி கிடைப்பதற்கான முடிவு இந்திய அரசினால் எட்டபட்ட போது இதற்கான வற் வரியினை மத்திய மாகாணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஆனால் பெரும் தொகையான வற் வரியை மாகாண சபைக்கு கட்ட முடியாது என்று மத்திய மாகாண சபை கையை விரித்து விட்டது. 

இதனால் இந்த பணம் மீண்டும் இந்திய அரசிற்கு செல்லும் நிலை ஏற்பட்ட போது அதிபர் அடங்களாக பாடசாலையின் பழைய மாணவர்களும், பெற்றோர் அபிவிருந்தி சங்க உறுப்பினர்களும் என்னிடம் வந்தார்கள். 

பின் எனது அமைச்சின் செயலாளர்களையும் அதிகாரிகளையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கல்வி அமைச்சின் மூலம் வற் வரியை செலுத்த முடிவு எட்டபட்டது. 

அதன் பயனாக திறைசேரியின் அனுமதியும் பாராளுமன்ற அமைச்சரவையின் அங்கிகாரமும் பெறபட்டு கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் தற்போதய இலங்கைக்கான இந்திய தூதுவர் இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் கைசாத்து இடபட்டது. 

இந்த பணத்தின் மூலம் அபிவிருத்திகள் அனைத்தும் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையில் மத்திய மாகாண சபையினால் மேற்க்கொள்ளபடும் என்று தெரிவித்தார்.