- ரொபட் அன்டனி

உலக வர்த்­தக அமைப்பின்  வர்த்­தக அனு­ச­ரணை ஒப்­பந்­தத்தை இலங்கை அங்­கீ­க­ரித்­துள்­ள­தாக  உலக வங்கி தெரி­வித்­துள்­ளது.   இது­இ­லங்­கை­யி­லுள்ள வர்த்­தக சமூ­கங்­க­ளுக்கு நன்மை பயக்கும் என்றும்  உலக வங்கி  குறிப்­பிட்­டுள்­ளது.  

அது மட்­டு­மன்றி வெளிநாட்டு மற்றும் உள்­நாட்டு  முத­லீ­டு­க­ளுக்கு      வச­தி­களை ஏற்­ப­டுத்தும் நோக்கில் அனைத்து பணி­க­ளையும்  ஒரே  இடத்தில் முன்­னெ­டுக்கும்  நோக்கில் தேசிய ஒற்றை நுழை­வாயில் என்ற வேலைத்­திட்­டத்­தையும்   இலங்கை  முன்­னெ­டுக்­க­வேண்டும் என  உலக வங்கி  குறிப்­பிட்­டுள்­ளது. 

அந்த வகையில்  உலக வர்த்­தக அமைப்பின்  வர்த்­தக அனு­ச­ரணை ஒப்­பந்தம் என்றால் என்­ன­வென்று பார்ப்போம். அதா­வது உலக வர்த்­தக அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டதன் பின்னர் இடம்­பெறும்  முத­லா­வது முக்­கிய பன்­முக ஒப்­பந்­த­மாக வர்த்­தக அனு­ச­ரணை ஒப்­பந்தம் அமைந்­துள்­ளது. 

அள­விற்கு அதி­க­மான உத்­தி­யோ­க­பூர்வ விதிகள் மற்றும் நடை­மு­றைகள் திணிக்­கப்­ப­டு­கின்ற நிலை­மையைக் குறைப்­பதன் மூல­மா­கவும் வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் புதிய தொழில்­நுட்­பங்­களை நாடிப் பயன்­ப­டுத்­து­வதன் மூல­மா­கவும்  வர்த்­தகச் செயற்­தி­றனை மேம்­ப­டுத்­து­வதை நோக்­க­மாகக் கொண்­டதே இந்த ஒப்­பந்­த­மாகும். இது எல்­லை­களைக் கடந்து விரை­வா­கவும் நம்­பத்­தக்­க­தா­கவும் மலி­வா­கவும் வர்த்­தகம் செய்யும் திறனை மேம்­ப­டுத்­து­கின்­றது. 

மேலும் உலக வர்த்­தக அமைப்பின் வர­லாற்றில் முதன் முறை­யாக வர்த்­தக அனு­ச­ரணை ஒப்­பந்­தத்­திற்கு அமை­வாக செய்­ய­வேண்­டிய விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான  ஒவ்­வொரு நாட்­டி­னதும் ஆற்­ற­லுடன் இது  தொடர்­பு­ப­டுத்­தப்­படும். இதன் மூலம் அபி­வி­ருத்­தி­ய­டைந்த அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் மற்றும் குறை­வாக அபி­வி­ருத்­தி­ய­டைந்­துள்ள நாடு­க­ளி­டையே ஒரு சமத்­துவ கள­நிலை தோற்­று­விக்­கப்­ப­டு­வ­தாக   உலக வங்கி சுட்­டிக்­காட்­டு­கின்­றது. 

வர்த்­தக அனு­ச­ரணை ஒப்­பந்­தத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­த­னூ­டாக இலங்­கையின் ஒட்­டு­மொத்த  வர்த்­தக ஒத்­து­ழைப்புச் சூழ்­நி­லையை அதி­கா­ரி­களால் காத்­தி­ர­மான வகையில் மேம்­ப­டுத்த முடியும். 

வெளி­நாட்டு சந்­தை­க­ளுக்கு உரிய நேரத்­திலும் செலவு குறைந்­த­வ­கை­யிலும் உற்­பத்­திப்­பொ­ருட்­களை விநி­யோ­கிக்­கக்­கூ­டிய ஆற்­ற­லி­லேயே இலங்கை நிறு­வ­னங்­களின் போட்­டித்­தன்மை என்­பது தங்­கி­யி­ருக்­கின்­றது. உட்­கட்­ட­மைப்பை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான அணு­கலை மேம்­ப­டுத்­துதல் செலவு கூடிய மற்றும் சுமை­நி­றைந்­த­து­மான வர்த்­தக நடை­மு­றை­களை குறைத்து எளி­மை­யா­னதும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டை­ய­து­மான நகர்­வு­களை மேற்­கொள்­வது இந்த விட­யத்தில் அவ­சி­ய­மாகும். 

இதன்படி உலக வர்த்­தக அமைப்பின் வர்த்­தக அனு­ச­ரணை ஒப்­பந்­தத்­தி­லுள்ள முக்­கி­ய­மான விதந்­து­ரைகள்  என்­ன­வென்று பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. 

முத­லா­வ­தாக தேசிய ஒற்றை நுழை­வாயில்  என்ற  விட­யத்தை   முன்­வைக்­கு­மாறு இந்த ஒப்­பந்­த­த்தின் ஊடாக    பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.    அடுத்­த­தாக  தேசிய வணிக தளம்   ஒன்றை உரு­வாக்­கு­மாறும்  உலக வர்த்­தக அமைப்பின் வர்த்­தக அனு­ச­ரணை ஒப்­பந்தம்   பரிந்­துரை செய்­கின்­றது. 

தேசிய ஒற்றை நுழை­வாயில்   என்­பது ஏற்­று­மதி இறக்­கு­மதி மற்றும் இடை­மாற்­றுதல் தொடர்­பான ஒழுங்­கு­முறை தேவை­களைப் பூர்த்­தி­செய்­து­கொள்­வ­தற்­காக வர்த்­தகம் மற்றும் போக்­கு­வ­ரத்து துறை­க­ளி­லுள்­ள­வர்கள் தரப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளையும் ஆவ­ணங்­க­ளையும் ஓரி­டத்­திலே சமர்ப்­பிப்­ப­தற்கு வழி­கோலும். 

குறிப்­பாக பல்­வேறு அர­சாங்க கட்­ட­மைப்­புக்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்ற ஒருங்­கி­ணைப்­புக்கள் போதி­ய­ளவில் காணப்­ப­டாமை உட்­பட பல கார­ணங்­களால் இலங்கை இன்னும் எல்லை முகா­மைத்­துவ விட­யத்தில் செயற்­தி­ற­னின்மை  இன்றி உள்­ளது.  

தேசிய ஒற்றை நுழை­வா­யி­லா­னது     வர்த்­தகம் தொடர்­பான அனைத்து ஆவ­ணங்­க­ளையும் அர­சாங்க அமைப்­புக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான இலத்­தி­ர­னியல் தளத்தை வழங்­கு­வ­த­னூ­டா­கவும் தேவை­யான அனைத்து அனு­ம­தி­க­ளையும் ஒரே மாத்­தி­ரத்தில் சௌக­ரி­ய­மாக இணை­யத்­தி­னூ­டாக பெற்­றுக்­கொள்ள ஆவ­ன­செய்­வ­தாலும்   முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக  அமையும் என்­பது உலக வங்­கியின் கருத்­தாக உள்­ளது.  இதே­வேளை தேசிய வணிக தளம்  என்­பது சர்­வ­தேச வர்த்­தகப் பரி­வர்த்­த­னைகள் தொடர்­பான அனைத்­து­வி­த­மான விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகள் தொடர்­பான தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஒற்றை ஆதார  முறை­மை­யாகும்.  

வர்த்­த­கர்கள் தமக்குத் தேவை­யான சட்­டங்கள் ஒழுங்­கு­மு­றைகள்; வரிச்­ச­லு­கை­யற்ற நட­வ­டிக்­கைகள்   கட்­ட­ணங்கள்   மற்றும் தமக்கு தேவை­யான தக­வல்­களை  தேடிக் கண்­ட­டை­வ­தற்கு அனு­ம­திப்­ப­த­னூ­டாக இந்த வணிகத் தக­வல்கள் தள­மா­னது வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் வச­திகள் ஒத்­து­ழைப்பை வழங்கும்  என்றும்  உலக வங்கி  சுட்­டிக்­காட்­டு­கின்­றது. 

 இதேவேளை உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதன் மூலமாக இலங்கை அதிகரித்த சர்வதேச வர்த்தகத்திற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. இது இலங்கையிலுள்ள வர்த்தக சமூகங்களுக்கு நன்மை பயக்கும். 

உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை முதலிலேயே அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதன் மூலமாக வர்த்தக செலவீனங்களை குறைப்பதற்கும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுப்பதற்கும் வலுவான அர்ப்பணிப்பை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது என்றும்  உலக வங்கி  குறிப்பிட்டுள்ளது.