ஆட்ட நிர்ணயம் எனக்கூறி எமது பெருமையை பறிக்க முடியாது

Published By: Priyatharshan

29 Sep, 2017 | 11:31 AM
image

இலங்கை கிரிக்கெட் அணி ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­பட்­ட­தாக சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்டை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம் என்று சிம்­பாப்வே தலைவர் கிரேம் கிரீமர் தெரி­வித்­துள்ளார்.

கிரீமர் தலை­மை­யி­லான சிம்­பாப்வே அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளை­யா­டி­யது. 

சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரை இலங்கை 2–-3 என தோற்று அதிர்ச்­சி­ய­ளித்­தது.

இந்­நி­லையில் இந்தப் போட்­டி­களில் ஆட்ட நிர்­ணயம் நடந்­தி­ருக்­கலாம் என்ற குற்­றச்­சாட்டும் அவ்­வப்­போது எழுந்­தது. ஆனாலும் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இது­வரை எந்த ஒரு ஆதா­ரமும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் இது குறித்து கருத்து வெளி­யிட்ட சிம்­பாப்வே அணித் தலைவர் கிரீமர், இலங்கை அணி வீரர்கள் அவ்­வாறு நடந்து கொண்­டி­ருப்­பார்கள் என்று தான் நம்­ப­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ளார். 

அவர்கள் தமது நாட்­டையும் கிரிக்­கெட்­டையும் அதிகம் விரும்­பு­கின்­றனர் என்றும் கிரீமர் கூறி­யுள்ளார்.

இலங்கை அணி­யினர் மீதான இந்த குற்­றச்­சாட்டு தமது அணி பெற்ற வெற்­றியை குறைத்து மதிப்­பி­டு­வ­தாக இருப்­ப­தா­கவும் சிம்­பாப்வே அணித் ­த­லைவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

ஆட்ட நிர்­ணய குற்­றச்­சாட்டு குறித்து நான் அதிகம் கூற விரும்­ப­வில்லை. எமது அணி­யினர் சிறப்­பாக ஆடி­னார்கள். அந்த பெரு­மையை யாராலும் பறித்­து­விட முடியாது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்று நான் நம்பவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35